முக்கிய செய்திகள்

தமிழ்நாட்டில் இன்று
தமிழ்நாட்டில் இன்று

சென்னை பூக்கடை அருகே மின்ட் தெருவில் உள்ள பேங்க் ஆப் இந்தியாவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் வங்கி கணக்கு புத்தகங்கள், காசோலை கட்டுகள், ஆவணங்கள் எரிந்து சாம்பலாகின. மின் கசிவு காரணமாக வங்கியில் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட போலீஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் குளிக்க சென்று நீரில் மூழ்கிய 3 இளைஞர்களில் 2 இளைஞர்கள் மீட்கப்பட்டுள்ளார். நண்பர்களுடன் மெரினாவில் குளிக்கும் பொது மாணவர் அருண் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளார். மீட்கப்பட்ட 2 இளைஞர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

மதுராந்தகம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகன நெரிசலை தவிர்க்க 10 கவுண்டர்கள் திறக்கப்பட்டிருந்தாலும் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்

 

மயிலாடுதுறை மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய விவகாரத்தில் இந்திய கடற்படை வீரர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் இந்திய கடற்படை மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின்(CMDA) நிர்வாக எல்லை, 1,189 சதுர கி.மீ. அளவுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டையில் அரக்கோணம் வரையில், 1,225 கிராமங்கள் புதிதாக CMDAவரையறைக்குள் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசாணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

நடிகை மீரா  மிதுணை காணவில்லை என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீரா மிதுனின் தாய் புகார் தெரிவித்துள்ளார். பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட வழக்கில் மீரா மிதுன் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருப்பதாக நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்திருந்தனர். இதனை அடுத்து அவரை காணவில்லை எனவும், கண்டுபிடித்து தருமாறும் அவரது தாயார் புகார் தெரிவித்துள்ளார்

ஆரணி: தீபாவளியையொட்டி தேப்பனந்தல் மாட்டுச்சந்தை களைக்கட்டியுள்ளது. வியாபாரி, விவசாயிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் தெரிவித்திருந்தார். அரசு ஒப்பந்தத்தில் நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் வசூல் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்: சொந்த ஊருக்கு புறப்படும் வெளிமாநில தொழிலாளர்களால் திருப்பூர் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது. கூட்டம் அதிகரிப்பால் பயணிகள் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்கின்றனர்.

 

சென்னை: உள்ளாட்சி தினமான நவ.1ல் நடைபெறும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில், தலைமை ஆசிரியர் கலந்துகொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு தலைவரும் கலந்துகொள்ள வேண்டும். பள்ளியின் வளர்ச்சிக்கான கற்றல் கற்பித்தல், பள்ளி மேம்பாடு சார்ந்த தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *