முகமை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள்

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பொதுப்பணித்துறையின் மூலம்  விருதுநகர் கௌசிகா ஆற்றில் குல்லூர் சந்தை அணைக்கட்டில் இருந்து கோல்வார்பட்டி அணைக்கட்டு வரை ஆற்றை சீர்;படுத்தும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


விருதுநகர் மாவட்டம்,  அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட  குல்லூர்சந்தை,  பெரிய வள்ளிக்குளம் மற்றும் பாலவநத்தம் ஆகிய ஊராட்சிகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் இன்று (21.03.2022) நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், குல்லூர்சந்தை ஊராட்சியில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.10 இலட்சம் மதிப்பில் ஆதிதிராவிடர்  மக்களுக்கான  சுற்றுச்சுவருடன் கூடிய மயானம் கட்டும் பணியினையும்,
பெரிய வள்ளிக்குளம் ஊராட்சியில்,  பிரதம மந்திரி ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ், ரூ.2.40 இலட்சம் மதிப்பில் தனிநபர் வீடு கட்டும் பணியினையும்  மற்றும் பெரியவள்ளி குளம் ஊராட்சியில், ராமசாமிபுரம் கிராமத்தில் உள்ள பெண்கள் பள்ளியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.6.18 இலட்சம் மதிப்பில் கழிப்பறை கட்டடம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தினையும்,
பாலவநத்தம் ஊராட்சியில் 14-வது  நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ், ரூ.9.25 இலட்சம் மதிப்பில், கட்டிமுடிக்கப்பட்ட குடிநீர்; சுத்திகரிப்பு நிலையத்தையும் மற்றும் பாலவநத்தம் ஊராட்சியில், 14-வது  நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ்,   ரூ.1.51  இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள  நெகிழி மறுசுழற்சி மையத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு  ஆய்வு செய்தார்.
பின்னர், விருதுநகர் வழியாக செல்லும் கௌசிகா ஆற்றில் குல்லூர் சந்தை அணைக்கட்டில் இருந்து கோல்வார்பட்டி  அணைக்கட்டு வரை ரூ.1.23 கோடி மதிப்பீட்டில்,  சுமார் 16 கி.மீ. நீளத்திற்கு நடைபெற்று வரும் ஆற்றை சமன்படுத்தும் மற்றும் சீர்;படுத்தும்  பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்தும், தரமாகவும் முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
இந்த ஆய்வின் போது, செயற்பொறியாளர், திருமதி இந்துமதி, செயற்பொறியாளர் (வைப்பாறு) திரு.கணபதி ரமேஷ், உதவி செயற்பொறியாளர் திரு.கண்ணன், உதவி பொறியாளர் திரு.விக்னேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி.சூரியகுமாரி, திரு. காஜா மைதீன் பந்தே நவாஸ், அருப்புக்கோட்டை வட்டாட்சியர்  திரு.அறிவழகன், உதவி செயற்பொறியாளர், ஒன்றிய பணிமேற்பார்வையாளர்கள்  மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், விருதுநகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *