விருதுநகர் மாவட்டத்தில் உலகதண்ணீர் தினமான 22.03.2023 அன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர்
முனைவர்.வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினமான 22.03.2023 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கீழ்க்காணும் கூட்டப் பொருள்கள் குறித்து விவாதிக்கப்படஉள்ளது.
• உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினைப் பற்றி விவாதித்தல்.
• கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல்.
• கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்து விவாதித்தல்.
• சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதிசெய்வது குறித்து விவாதித்தல்.
• அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டத்தின் கீழ் 2021-22 மற்றும் 2022-23 ஆம் ஆண்டு ஊராட்சிகளில் தேர்வுசெய்யப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்ற விவரங்கள் குறித்து விவாதித்தல்.
• கிராம வளர்ச்சித்திட்டம் (ஏPனுP) குறித்து விவாதித்தல்.
• தூய்மைபாரத இயக்கம்(ஊரகம்) சுகாதாரம் குறித்து விவாதித்தல்.
• ஜல் ஜீவன் இயக்கம் குறித்து விவாதித்தல்.
• இதரபொருட்கள் குறித்து விவாதித்தல்.
எனவே, 22.03.2023 அன்று நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
