மார்ச் மாத ஜி.எஸ்.டி வசூல் கிடு கிடுவென அதிகரிப்பு .

டெல்லி: மார்ச் மாத மொத்த் ஜி.எஸ்.டி வருவாய் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 122 கோடியாகும். சிஜிஎஸ்.டி 29 ஆயிரத்து 546 கோடியும், எஸ்ஜிஎஸ்டி ரூ.37 ஆயிரத்து 314 கோடியுமாக உள்ளது. ஐஜிஎஸ்.டி 82 ஆயிரத்து 907 கோடியாகும். செஸ் வரியாக 10,355 கோடியும் வருவாய் வந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் ஜி.எஸ்.டி வருவாய் 1.50 லட்சம் கோடி ரூபாயை தாண்டுவது இது நான்காவது முறையாகும்.நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளால் சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படுகிறது.கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இந்த வரி விதிப்பு முறை அமலுக்கு வந்தது. கலால் வரி, கூடுதல் சுங்க வரி, சேவை வரி, வாட் வாரி உள்பட பல்வேறு விதமான வரிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட வரியாக சரக்கு மற்றும் சேவை வரி உள்ளது.ஒரே இந்தியா, ஒரே வரி என்னும் அடிப்படையில் இந்த வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒரே மாநிலத்திற்குள் நடைபெறும் பரிவர்த்தனைகளுக்கு மத்திய ஜி.எஸ்.டி. (CGST) மத்திய அரசாலும், மாநில ஜி.எஸ்.டி. (SGST) மாநில அரசினாலும் விதிக்கப்படுகிறது. இந்த வரி வருவாயை மத்திய மாநில அரசுகள் பகிர்ந்து கொள்கின்றன. அதேபோல் மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் பரிவர்த்தனைகளுக்கு ஒருங்கிணைந்த ஐஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.ஜிஎஸ்டியை பொறுத்தவரையில் 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் ஆகிய 4 சிலாப்களில் வரி விதிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதம் ஜி.எஸ்.டி வரி முறையில் வசூலான தொகை விவரத்தை மத்திய அரசு பகிர்ந்து வருவது வாடிக்கையாகும். அந்த வகையில், கடந்த மார்ச் மாதத்திற்கான வரி வசூல் விவரத்தை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி மார்ச் மாத வரி 1.60 லட்சம் கோடியாக உள்ளது.இது முந்தைய ஆண்டை விட 13 சதவிகிதம் ஆகும். அதுபோக இதுவரை வசூல் செய்யப்பட்ட இரண்டாவது அதிகபட்ச தொகை இதுவேயாகும். இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- மார்ச் மாத மொத்த் ஜி.எஸ்.டி வருவாய் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 122 கோடியாகும். சிஜிஎஸ்.டி 29 ஆயிரத்து 546 கோடியும், எஸ்ஜிஎஸ்டி ரூ.37 ஆயிரத்து 314 கோடியுமாக உள்ளது.ஐஜிஎஸ்.டி 82 ஆயிரத்து 907 கோடியாகும். செஸ் வரியாக 10,355 கோடியும் வருவாய் வந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் ஜி.எஸ்.டி வருவாய் 1.50 லட்சம் கோடி ரூபாயை தாண்டுவது இது நான்காவது முறையாகும். அதேபோல் இந்த வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட பிறகு வசூல் செய்யப்பட்ட இரண்டாவது அதிகபட்ச தொகையாக மார்ச் மாத வசூல் பதிவாகியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *