மாருதி சாம்ராஜ்யத்தை தரைமட்டமாக்க போகும் டாடா கார்.

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று டாடா நெக்ஸான் (Tata Nexon). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். குளோபல் என்சிஏபி (Global NCAP) மோதல் சோதனைகளில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் (Safety Rating) வாங்கிய முதல் இந்திய கார் என்ற பெருமை இதற்கு உண்டு.எனவே வாடிக்கையாளர்கள் பலர் இந்த காரை பெரிதும் நேசிக்கின்றனர். மாருதி பிரெஸ்ஸா (Maruti Brezza), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), கியா சொனெட் (Kia Sonet) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300) ஆகியவைதான், டாடா நெக்ஸான் காரின் மிக முக்கியமான போட்டி மாடல்கள் ஆகும்.இந்த சூழலில் போட்டி அதிகமாகி கொண்டே இருப்பதால், நெக்ஸான் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தீவிரமாக தயாராகி வருகிறது. 2023 டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் (2023 Tata Nexon Facelift) மாடல் தற்போது இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் காரை மிகப்பெரிய அளவில் அப்டேட் செய்து விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போவில், (Tata Curvv) என்ற கான்செப்ட் மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதன் டிசைனும், புதிய டாடா நெக்ஸான் காரின் டிசைனும் பல வகைகளில் ஒன்றாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இவை எல்லாவற்றுக்கும் மேலாக, 2023 டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், அடாஸ் தொழில்நுட்ப வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டும் நடந்தால், இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில், அடாஸ் தொழில்நுட்ப வசதியுடன் விற்பனைக்கு கிடைக்கும் முதல் கார் என்ற பெருமையை 2023 டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் பெறும். செயல்திறனை பொறுத்தவரையில், 125 பிஹெச்பி பவர் மற்றும் 225 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய புதிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற காரணங்களால் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள 2023 டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடல், வரும் ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக வரும் ஜூலை மாதமே இந்த புதிய மாடலின் உற்பத்தி பணிகள் தொடங்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் நிலவி கொண்டிருப்பதால், ஒரு மாதத்திற்கு 15 ஆயிரம் புதிய நெக்ஸான் கார்களை உற்பத்தி செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் டாடா நெக்ஸான் காரின் ஆரம்ப விலை (Price) வெறும் 7.80 லட்ச ரூபாயாக உள்ளது. அதே சமயம் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 14.35 லட்ச ரூபாயாக இருக்கிறது. ஆனால் பல்வேறு அப்டேட்கள் செய்யப்படுவதன் காரணமாக 2023 டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை, இதைக்காட்டிலும் சற்று அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனினும் இது நிச்சயமாக வாடிக்கையாளர்கள் வழங்க கூடிய பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *