கலிபோர்னியா,அக்.16

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகானத்தில் கண் மருத்துவரைச் சந்திக்கச்சென்ற பெண்ணின் விழியிலிருந்து 23 காண்டாக்ட் லென்ஸை அகற்றிய மருத்துவர்கள் காரணம் கேட்டு அதிர்ந்து போனார்கள்
கலிபோர்னியா மெடிகல் ஜெர்னல் நியூஸ் என்ற மருத்துவர்களுக்கான செய்திப்பதிவில் கண் மருத்துவர் கத்தரீனா குர்டீவா (Katerina Kurteeva) என்பவர் வெளியிட்ட செய்திப்பதிவில் கூறியுள்ளதாவது
தொடர்ந்து கண் வலிப்பதாகவும் தன்னால் சரியாக எதையும் பார்க்க இயலவில்லை என்று ஒரு பெண்(பெயர் வெளியிடவில்லை) வந்திருந்தார்.
முதலில் தூசி விழுந்த காரணத்தால் கண்களைக் கசக்கி அதன் மூலம் சிறு காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று நினைத்தேன்,
பிறகு கண்களை பரிசோதனை செய்த போது தொடர்ந்து பல காண்டாக்ட் லென்ஸ்கள் ஒன்றன் மீது ஒன்றாக இருப்பதைக் கண்டேன், இது எனக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிறகு சிறிய வகை வாக்குவம் கருவி மூலம் மெதுவாக ஒன்றன் பின் ஒன்றாக லென்ஸ்களை அகற்றத்துவங்கினேன், ஆனால் தொடர்ந்து லென்ஸ்கள் வந்துகொண்டே இருந்தது, மொத்தம் 23 லென்ஸ்களை நீக்கியுள்ளேன்.
இது தொடர்பாக அவரிடம் கேட்ட போது பணிக்குச்செல்லும் அவசரத்தில் முதல் நாள் அனிந்திருந்த காண்டாக்ட் லென்ஸை அகற்ற மறந்துவிடுவேன் இவ்வாறாக இத்தனை லென்ஸ்கள் கண்களிலேயே இருந்துவிட்டது என்று கூறினார்.
இதனை அடுத்து அவருக்கு மனநல ஆலோசனைக்கு பரிந்துரை செய்து அனுப்பினார். காண்டாக்ட் லென்ஸ்களை அகற்றாமல் தொடர்ந்து அணிந்துகொண்டால் விழித்திறை பாதிப்பு ஏற்பட்டு பொருட்களை அடையாளம் காணாமல் போகும் அபாயம் உண்டு என்று மருத்துவர் கூறினார்.