தமிழ்நாடு தலைமைச் செயலக பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் –
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்
தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்
இன்று (17.3.2023) தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-
வது தளத்தில், தலைமைச் செயலக பணியாளர்களுக்காக தமிழ்நாடு தலைமைச்
செயலகச் சங்கம், அப்போலோ மருத்துவமனையோடு இணைந்து நடத்தும்
மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து, முகாமில் மேற்கொள்ளப்படும்
மருத்துவ பரிசோதனைகளை பார்வையிட்டார்.
தமிழ்நாடு தலைமைச் செயலக பணியாளர்களுக்கு அப்போலோ
மருத்துவமனையின் சார்பில் முழு உடல் பரிசோதனை முகாம் 17.3.2023 முதல்
27.3.2023 வரை நடைபெறவுள்ளது.
இப்பரிசோதனை முகாமில் சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு,
கொலஸ்ட்ரால், இருதய பரிசோதனை, சிறுநீரகப் பரிசோதனை, இரத்தப்
பரிசோதனை, இ.சி.ஜி., எக்ஸ்ரே, அல்ட்ரா சோனோகிராம், எக்கோ போன்ற
பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இம்மருத்துவ முகாம் மூலம் சுமார் 5000
பணியாளர்கள் பயன்பெறுவார்கள்.
இந்த நிகழ்வின்போது, மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர்
முனைவர் க. பொன்முடி, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்
துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், மாண்புமிகு இந்து சமயம் மற்றும்
அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு, மருத்துவம் மற்றும்
மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார்,
இ.ஆ.ப., தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் மரு. ச. உமா, இ.ஆ.ப.,
அப்போலோ மருத்துவமனை குழும துணைத் தலைவர் முனைவர் பிரீத்தா
ரெட்டி, மற்றும் தமிழ்நாடு தலைமைச் செயலக சங்க நிர்வாகிகள்
உடனிருந்தனர்.