மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் ஆளுநர் முற்றுகை போராட்டம் :தேசிய முன்னேற்ற கழகம் ஆதரவுநிறுவன ஜி.ஜி.சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில்:குடிமைப்பணி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுடன் இரண்டு தினங்களுக்கு முன்பு ஆளுநர் ரவிகலந்துரையாடினார். அப்போது அவர்; ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வெளிநாட்டின் நிதியை
பயன்படுத்தி மக்களை போராட்டம் செய்ய தூண்டிவிட்டு ஆலையை மூடிவிட்டனர். நாட்டின் மொத்த
காப்பர் உற்பத்தியில் 40 சதவீதம் ஸ்டெர்லைட் ஆலை பூர்த்தி செய்து வந்தது என ஆளுநர்
பேசியிருக்கிறார். தூத்துக்குடி மக்களை கொச்சைப்படுத்திய பேசி ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு தேசிய
முன்னேற்ற கழகம் கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது.
மேலும், ;சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஆளுநர் நிலுவையில் வைத்தால்
அதற்கு நாகரீகமாக ஒப்புதல் தரவில்லை என்பதே பொருள். உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வே
நிலுவையில் வைப்பது நாகரீகமாக ஒப்புதல் தரவில்லை என்பதே பொருள் என்று தெரிவிக்கிறது. என
ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது அரசியல் சாசனம் குறித்து புரிதல் இல்லாமல் இருக்கிறார் என்பதை
தெளிவுப்படுத்துகிறது.
சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதில் ஆளுநருக்கு ஏதாவது சந்தேகம்
இருக்கும்பட்சத்தில் அதற்கு உரிய விளக்கத்தை மாநில அரசிடம் பெற்று, சட்டமசோதாவிற்கு ஒப்புதல்
அளிக்க வேண்டியது தான் ஆளுநரின் பணி என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில்
தெளிவாக கூறியிருக்கும் போதும், தொடர்ந்து தனக்கு தான் அதிகாரம் இருப்பது போல ஆளுநர்
ஆர்.என்.ரவி செயல்படுவது ஒருபோதும் ஏற்று கொள்ள முடியாது.
ஆட்டுக்கு தாடி போல மாநிலத்துக்கு ஆளுநர் பதவி என்பது தேவையில்லை என்று பேரறிஞர் அண்ணா
சொன்னது நூறு சதவீதம் உண்மை என்பது ஆர்.என்.ரவி செயல் தெளிவுப்படுத்தியிருக்கிறது. சனாதானம்,
மதவாதம் என ஆர்எஸ்எஸ்., செய்தி தொடர்பாளராக செயல்பட்டு கொண்டிருக்கும் ஆர்.என்.ரவியின்
செயல்பாட்டை தேசிய முன்னேற்ற கழகம் வன்மையாக கண்டிக்கிறது.
தமிழக நலனுக்காக எதிராகவும், மதமோதல், சாதி மோதலை ஏற்படுத்த நினைக்கும் ஆளுநர்
ஆர்.என்.ரவியை கண்டித்து தி.மு.க கூட்டணியான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, வரும் 12-ம் தேதி
ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் ஆதரவை
தெரிவித்துக் கொள்வதோடு, இந்த போராட்டத்தில் தேசிய முன்னேற்ற கழகம் நிர்வாகிகள், தொண்டர்கள்
திரளாக கலந்துகொண்டு
மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் ஆளுநர் முற்றுகை போராட்டம்
