மக்கள் நல திட்டங்கள் தொடர்பான புகைப்பட கண்காட்சி

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் பெண்களின்
தன்னுரிமைகளும் பாலின சமத்துவம் மற்றும் மக்கள் நல திட்டங்கள் தொடர்பான புகைப்பட
கண்காட்சி காரைக்காலில் தொடங்கியதுகாரைக்கால் மார்ச் 21 2023மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் பெண்களின்
தன்னுரிமைகளும் பாலின சமத்துவம் மற்றும் மக்கள் நல திட்டங்கள் தொடர்பான நான்கு நாள்
புகைப்பட கண்காட்சி காரைக்காலில் செவ்வாக்கிழமை தொடங்கியது. இதனை காரைக்கால்
மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர். திரு. லோகேஸ்வரன் ,துணை ஆட்சியர்
திரு.பாஸ்கரன் ஆகியோர்    தொடங்கிவைத்தனர். தமிழக மற்றும் புதுவை மாநில மண்டல
மக்கள் தொடர்பு இயக்குனர் ஜெ.காமராஜ் தலைமை தாங்கினார்.
திருச்சி கள விளம்பர அலுவலர் திரு கே தேவி பத்மநாபன் வரவேப்புரையாற்றினார். தமிழக
புதுச்சேரி மத்திய மக்கள் தொடர்பக இயக்குனர் திரு ஜே காமராஜ் தலைமையில் நிகழ்ச்சி
நடைபெட்றது. புகைப்பட கண்காட்சியினை தமிழக மற்றும் புதுவை மாநில மண்டல மக்கள்
தொடர்பு இயக்குனர்.ஜெ.காமராஜ் இன்று தலைமை வகித்து   அவர் பேசுகையில்-
பெண்களுக்கான கல்வி சுதந்திரத்திற்கு பிறகுதான் வலுப்பெற்றது. பெண்களுக்கான
முக்கியமான அமர்வாக 75 –வது சுதந்திரதினஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
பெண்கள் கல்வி வளர்ச்சி அடைந்தால் மட்டுமே சாதனைகள் பெற வழிவகை செய்யும்.
சுதந்திரபோராட்டத்தில் பெண்களின் பங்கு குறித்து   இந்த கண்காட்சி மூலமாக நாம்
காணமுடியும். சுதந்திரநாட்டில் பெண்களுக்கான உரிமைகள் கல்வியின் வாயிலாக
நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. எனவே பெண்குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்களின்
உரிகைள் குறித்த விழிப்புணர்வு தற்போது தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது,
என்றார்.காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குனர் மருத்துவர் ரா சிவராஜா குமார்
காரைக்கால் அகில இந்தியா வானொலி பண்பலை நிகழ்ச்சி பிரிவு தலைவர் திரு இர
வெங்கடேஸ்வரன் காரைக்கால் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மற்றும் சமூக நல
அலுவலர் திருமதி போ சத்யா காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி முதல்வர்
முனைவர் த கனகவேல் உரையாற்றினர். தஞ்சாவூர் கள விளம்பர உதவியாளர் திரு கே
ரவீந்திரன் திருச்சி கள விளம்பர உதவியாளர் திரு எஸ் அருண்குமார் நிகழ்ச்சியே
ஒருங்கிணைந்தனர்.
இந்த புகைப்பட கண்காட்சியில் வீர மங்கை வேலு நாச்சியார் குயிலி போன்ற சுதந்திர
போராட்ட பெண் வீரர்கள், பெண் சாதனையாளர்கள் , மற்றும் மக்கள் நல திட்டங்கள்
தொடர்பான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. எல் இ டி திரை மூலம் சுதந்திர போராட்டம்
மத்திய அரசின் மக்கள் நல திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு திரைப்படங்கள்
திரையிடப்பட்டன. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சமூக நல துறை சுகாதார துறை
அஞ்சல் துறை அரங்குகள் இடம்பெற்றன. திரு சூசைராஜ் தலைமையிலான காரை கலை
காவலர் கலை குழுவின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெட்றது. பல்வேறு போட்டிகளில்
வெற்றிபெற்ற மாணாக்கருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *