சென்னை: சென்னையில் போக்குவரத்து விதி மீறல் செய்பவர்களை கண்காணிக்க, அவர்களுக்கு அபராதம் விதிக்க புதிய வழிமுறை ஒன்றை தமிழ்நாடு அரசு கையில் எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்து விதிகள் தீவிரமாக்கப்பட்டு வருகின்றன.மிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சாலை விதிகளை பலர் மீறுவதாக புகார்கள் புகார்கள் அதிகரித்து வருகின்றன. மோடி, அமித்ஷா அண்ணாமலையை நம்பவில்லை – ப்ரியன், பத்திரிகையாளர் |l பில்கிஸ் பானு வழக்கு.. குற்றவாளிகளை விடுதலை செய்ததற்கு எதிரான மனு.. சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை சென்னை முக்கியமாக சென்னையில் அதிகம் இப்படி நடக்கிறது. அதோடு சிலர் சாலைகளில் அபாயகரமான ஸ்டண்ட்களை செய்வதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் சமீபத்தில் தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு குற்றங்களுக்கான, விதி மீறல்களுக்கான அபராத தொகைகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அந்த வகையில் சென்னையில் போக்குவரத்து விதி மீறல் செய்பவர்களை கண்காணிக்க, அவர்களுக்கு அபராதம் விதிக்க புதிய வழிமுறை ஒன்றை தமிழ்நாடு அரசு கையில் எடுத்துள்ளது. போக்குவரத்து விதி மீறல் அதன்படி போக்குவரத்து விதிமீறல் செய்பவர்களை பிடித்து அவர்களிடம் அபராதம் வசூலிக்க நேரம் செலவழிக்காமல், அவர்களை போட்டோ எடுத்து நேரடியாக அவர்களின் வாகன எண்ணில் இணைக்கப்பட்டு இருக்கும் விலாசத்திற்கும், போன் எண்ணிற்கும் அபராதம் அனுப்பப்படும் முறை கொண்டு வரப்பட்டு உள்ளது. உதாரணமாக நீங்கள் வேகமாக ஹெல்மெட் போடாமல் பைக்கில் செல்கிறீர்கள். போலீசால் உங்களை பிடிக்க முடியவில்லை என்றாலும், அவர் போட்டோ எடுத்தால் போதும் அபராதம் உங்களை தேடி வருகிறது. பெங்களூர் பெங்களூர் போன்ற நகரங்களில் ஏற்கனவே இந்த முறை நடைமுறையில் உள்ளது. ஆனால் சென்னையில் இதில் கூடுதல் ஒரு வழிமுறையும் சேர்க்கப்பட்டு உள்ளது. சென்னையில் போலீஸ் மட்டுமின்றி மக்களும் போட்டோ எடுக்க முடியும். மக்களும் போட்டோ எடுத்து ட்விட்டர் பக்கத்தில் போட்டோ எடுத்து பதிவு செய்ய முடியும். அதில் இருக்கும் நம்பரை பார்த்து.. ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டுபவர்கள் சென்றால்.. அந்த நம்பருக்கு தானாக அபராதம் அனுப்பப்படும். இந்த நடைமுறையை கடந்த சில நாட்களாக போலீசார் பின்பற்ற வருகின்றனர். ஆம்புலன்ஸ் முன்னதாக அபராத வீதிகளிலும் சில நாட்களுக்கு முன் மாற்றம் செய்யப்பட்டது. உதாரணமாக ஆம்புலன்சுக்கு வழிவிடவில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஆம்புலன்சுக்கு வழிவிடுவது மிகப்பெரிய குற்றம். இது எந்த வாகனமாக இருந்தாலும் அந்த அபராதம் பொருந்தும். முக்கியமாக டிடிஎப் வாசன் போன்றவர்கள் சாலைகளில் அபாயகரமாக ஸ்டண்ட்களை செய்வதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வந்தது. சாலை போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று சமீபத்தில் தமிழ்நாடு போக்குவரத்து துறை போலீசாரும் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். டிராபிக் தீயணைப்பு வண்டி, அவசர வாகனங்களுக்கு வழிவிடவில்லை என்றாலும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தேவையின்றி ஹார்ன் அடித்தால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஆபத்தான முறையில் வண்டி ஓட்டினால் 10000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக சரக்கு ஏற்றிக்கொண்டு செல்லும் வாகனங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றெல்லாம் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது இன்னொரு விதிமீறல் ஒன்றிற்கான அபராத தொகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அபராதம் அந்த வகையில் சென்னையில் டிராபிக் சிக்னல்களில் ‘ஸ்டாப்லைன்’ கோட்டை தாண்டி நிற்க கூடாது. அப்படி நின்றால் அது விதி மீறல். இந்த குற்றத்திற்காக 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இதற்கு முன் இந்த குற்றத்திற்கு அபராதம் விதிக்கப்படவில்லை. இனி 500 ரூபாய் வாங்கப்படும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். ஸ்டாப்லைன்’ கோட்டை தாண்ட கூடாது என்பது தொடர்பாக நேற்று சென்னை முழுவதும் 287 இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை போலீசார் மேற்கொண்டனர். முக்கியம் சாலைகளில் சிவப்பு விளக்கு எரியும் நேரத்தில் பலர் கோட்டிற்கு முன் நிறுத்தாமல் ஜீப்ரா கிராஸில் வண்டியை நிறுத்துகிறார்கள். இதனால் மக்கள் நடப்பது சிரமம் ஆகிறது. இதை தடுக்கவே இந்த அபராதம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி அவருடன் பயணிக்கும் நபருக்கும் இனி அபராதம் விதிக்கப்படும். இதற்கு முன் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் ரேஸிங் செய்யும் வகையில் வண்டி ஓட்டினால் அதற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.ரிஜிஸ்டிரேஷன் இல்லாத வாகனத்தை ஓட்டினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இந்த புதிய விதிகள் இன்றோடு அமலுக்கு வருகிறது.
போக்குவரத்து விதி மீறல் செய்பவர்களை கண்காணிக்க, புதிய வழிமுறை
