பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சில தினங்களுக்கு முன்னர் இந்தப் படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.இதனையடுத்து பொன்னியின் செல்வன் 2 ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடைபெறவுள்ளன. இந்நிலையில், இந்தப் படத்தின் ரன்னிங் டைம் குறித்து வெளியான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பரில் வெளியான நிலையில், 2ம் பாகம் வரும் 28ம் தேதி ரிலீஸாகிறது. இதனையடுத்து பொன்னியின் செல்வன் 2 ப்ரோமோஷன் தொடங்கவுள்ள சூழலில், இப்படத்தின் ரன்னிங் டைம் குறித்து அப்டேட் கிடைத்துள்ளது பொன்னியின் செல்வன் முதல் பாகம் 2 மணி நேரம் 50 நிமிடங்கள் ரன்னிங் டைமுடன் வெளியானது. இதனால், இரண்டாவது பாகமும் 3 மணி நேரத்துக்குள்ளாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பொன்னியின் செல்வன் 2 மொத்தம் 3 மணி நேரம் 30 நிமிடங்கள் வரை ஓடும் என தகவல் வெளியாகியுள்ளது.3.30 மணி நேரம் என்றால் ரசிகர்கள் சோர்ந்துவிடுவார்கள் என்பதால், மீண்டும் எடிட்டிங் செய்யப்பட்டுள்ளதாம். அதன்படி, 2 மணி 37 நிமிடம் வரை பொன்னியின் செல்வன் 2 ரன்னிங் டைம் இருக்கும் என சொல்லப்படுகிறது. முதல் பாதி 1.19 நிமிடமும், இரண்டாம் பாதி 1.18 நிமிடமும் ஓடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணிரத்னத்தின் இந்த முடிவால் லைகா நிறுவனம் குழப்பத்தில் உள்ளதாம். பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகும் போது ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால், பொன்னியின் செல்வன் 2ம் பாகத்திற்கு ரசிகர்களிடம் பெரிதாக எந்த ரியாக்‌ஷனும் இல்லை. இதனால், மூன்றாம் பாகம் எடுத்தால் அது பிஸினஸ் ஆகுமா என்பது சந்தேகமே. இருப்பினும் பொன்னியின் செல்வன் 2 ரன்னிங் டைம் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *