பொது இடங்களில் கணினி இயந்திரங்கள், ரிமோட் கைவிலங்கு, கிரிப்டோ மோசடியைக் கண்டறியும் கருவி .. தமிழக அரசின் புதிய முன்னெடுப்புகள்!!

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறையினருக்காக 101 அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அவை பின்வருமாறு..

*விழுப்புரம் மேல்மலையனூர், கரூர் நங்கவரம், வேலூர் பிரம்மபுரம் மற்றும் பெரம்பலூர் தாலுகா ஆகிய 5 இடங்களில் புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படும்

*சென்னை பெருநகர காவல் பகுதியில் வானகரம், ஆவடி காவல் ஆணையரக பகுதியான புதூர் ஆகிய இடங்களில் புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படும்.

*தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் மற்றும் மேடவாக்கம் பகுதியில் புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படும்

*காவல்துறையினருக்கு சீருடைக்கு பதில் ஆண்டுக்கு ரூ.4500 பணமாக வழங்கப்படும்.

*எரிபொருள் படி ரூ.370-ல் இருந்து ரூ.515-ஆக உயர்த்தி வழங்கப்படும்

*காவல்துறையினருக்கு நாள் ஒன்றுக்கு உணவுப்படி ரூ.300-ஆக உயர்த்தி வழங்கப்படும்

*காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ரூ.25,000 ல் இருந்து ரூ.30,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

*நெல்லை வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில் ₹10.15 கோடி மதிப்பில் புதிதாக மரபணு ஆய்வுப்பிரிவு உருவாக்கப்படும்

*குற்றவாளிகளை கைது செய்யும் போது பலத்தை பிரயோகிக்காமல் பாதுகாப்பாகவும் சட்ட ரீதியாகவும் அவர்களை கட்டுப்படுத்த 25 ரிமோட் மூலம் விலங்கிடும் Remote Restraint Wrap கருவி வாங்கப்படும்

*க்ரிப்டோ கரன்சி மோசடிகளை கண்டுபிடிக்க செயின் பகுப்பாய்வு ரியாக்டர் (Chain Analysis Reactor Tool) கருவி வாங்கப்படும்; க்ரிப்டோ கரன்சியின் மூலத்தையும், சேரும் இடத்தையும் கண்டுபிடிக்க இக்கருவி பயன்படும்

*கோவையில் புதிய மரபணு ஆய்வகம் அமைக்கப்படும்.இன்னுயிர் காப்போம் திட்டம் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 2019-ல் சாலை விபத்தில் 18,129-ஆக இருந்த உயிரிழப்பு எண்ணிக்கை 2022-ல் 17,884 ஆக குறைந்துள்ளது.

*தீவிரவாத நடவடிக்கைகளை திறமையாக எதிர்கொள்ள காவல்துறை நுண்ணறிவுப் பிரிவில் புதிதாக தீவிரவாத தடுப்புப்பிரிவு (Anti Terrorism Squad) ஒன்று 383 பணியாளர்களைக் கொண்டு சுமார் 5751.61 லட்சம் செலவில் அமைக்கப்படும்

*சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி, காரிப்பட்டி காவல் நிலையங்கள், சேலம் மாநகர காவல் ஆணையரகத்துடன் இணைக்கப்படும்.

*கோவை மாவட்டம் துடியலூர், கவுண்டம்பாளையம், வடவள்ளி காவல் நிலையங்கள் கோவை மாநகர காவல் ஆணையரகத்துடன்இணைக்கப்படும் இணைக்கப்படும்.

*திருப்பூர் மாவட்டம் மங்கலம் காவல் நிலையம் திருப்பூர் மாநகர காவல் ஆணையரகத்துடன் இணைக்கப்படும்.

*திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, திருப்பாலைவனம் காவல் நிலையங்கள் ஆவடி மாநகர காவல் ஆணையரகத்துடன் இணைக்கப்படும்.

*சேலம் மாவட்டம் அணைக்கட்டு, கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஆகிய மூன்று புதிய காவல் உட்கோட்டங்கள் உருவாக்கப்படும்.

*தென்காசி மாவட்டம் புளியரை, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, தஞ்சை மாவட்டம் நாச்சியார்கோவில், சோழபுரம், தாம்பரம் மாநகரம் பெரும்பாக்கம், ஓட்டேரி ஆகிய காவல் நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும்

*சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் AI-ஐ அடிப்படையாக கொண்டு ChatBot, VoiceBot, Video Chat ஆகியவையுடன் கணினி இயந்திரங்கள் வைக்கப்படவுள்ளது!

*சென்னை மாநகர காவலர்களுக்கு வழங்குவது போலவே, தாம்பரம் மற்றும் ஆவடி மாநகர காவலர்களுக்கும் மாதம் 26 நாட்கள், நாளொன்றுக்கு ₹300 உணவுப்படியாக வழங்கப்படும்.

*சென்னை மாநகரில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காகமேலும் 2000 சிசிடிவி கேமராக்கள் நிறுவப்படும்

*ஒருங்கிணைந்த வாகன சோதனை மையங்களில் மடிக்கக்கூடிய பேரிகாட், ANPR கேமராக்கள் வாங்கப்படும்

*போக்குவரத்து விதிமீறல் செய்யும் வாகன எண்களை கண்டறிய 300 நவீன கேமராக்கள் வாங்கி பொறுத்தப்படும்

*சென்னையில் 10 ஆண்டுகளை கடந்த 57 போக்குவரத்து சிக்னல்களை மாற்றம் செய்து புதிய சிக்னல்கள் நிறுவப்படும்

*சென்னை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த 3 துறை சார் வல்லுநர்கள் ஈடுபடுத்தப்படுவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *