புதுடெல்லி: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்கள் வசிக்கும் மாநிலத்திலேயே ரேஷன் அட்டை வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, அசானுதீன், அமானுல்லா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “நாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணியில் புலம்பெயர் தொழிலாளர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. பசியால் வாடுபவர்களை தேடி கண்டுபிடித்து அவர்களின் பசியை போக்குவது ஒன்றிய, மாநில அரசுகளின் கடமை. எனவே, இ-ஷ்ரம் இணையதளத்தில் பதிவு செய்துள்ள அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் ஒன்றிய, மாநில அரசுகள் 3 மாத காலத்துக்குள் குடும்ப அட்டை வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டை வழங்க 3 மாதம் அவகாசம்
