புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து வரும் 2030ஆம் ஆண்டுக்குள் சாத்தியம் ஆக வாய்ப்புள்ளதாக ஜெர்மன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெர்மனியைச் சேர்ந்த பயோ என் டெக் நிறுவனம், கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய பைசர் நிறுவனத்துடன் இணைந்து இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசிக்கு பயன்படுத்தப்பட்ட அதே mRNA தொழில்நுட்பத்தை கொண்டு புற்றுநோய்க்கான மருந்து தயாரிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.