புதுடில்லியில் சு . திருநாவுக்கரசர் எம் பி கைது .இராகுல் காந்தி எம்.பி.பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும் அதானி ஊழலை அம்பலப்படுத்த ஏபிசி அமைக்க வேண்டும் என்றுவலியுறுத்தியும் நாடாளுமன்றத்தில் இரு அவைகாங்கிரஸ் உறுப்பினர்களும் மற்றும் எதிர்க்கட்சியினரும் மைய மண்டபத்திற்கு வந்து குரல் எழுப்பினார்கள் . அதற்கு பின்னால் அவர்கள்காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ஊர்வலமாக புறப்பட்டனர் . அனைவரும் ஒன்றிணைந்து வந்து செய்தியாளர்களை சந்தித்து பாராளுமன்றத்தில் நடக்கும் அநியாயங்களையும் ஜனநாயகம் விளக்கப்படுவதை கண்டித்தும் ஜனநாயகம் பேராபத்தில் உள்ளதை விளக்கியும் பேட்டி அளித்தனர். ஊர்வலம் சென்ற காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தில்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். மதியம் ஒரு மணி அளவில் அவர்கள் அனைவரையும் கிங்ஸ் வேம்பில் இருக்கும் ஒரு மண்டபத்திற்கு அழைத்து வந்தனர்.பின்னர் சுமார் நான்கு மணி அளவில் அவர்களுக்கு காவல்துறையினர் உணவளித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மேனாள் மத்திய மாநில அமைச்சர் மேனாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் சு. திருநாவுக்கரசர் எம் பி மற்றும் மூத்த தலைவர்கள்நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர் .
ReplyForward
|