பி.கே.சேகர்பாபு தலைமையில்ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி
இன்று (25.3.2023) சென்னை பெருநகர வளர்ச்சி குழும அலுவலகக்
கூட்டரங்கில் மாண்புமிகு சென்னை பெருநகர வளர்ச்சி குழும அமைச்சர் (ம)
தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான
திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில்  தமிழ்நாடு சட்டமன்ற
கூட்டத்தொடரில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தொடர்பாக
அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம்
நடைபெற்றது.
சென்னை மாநகரின் அசுர வளர்ச்சியை கருத்தில் கொண்டு அதன்
உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையிலும், மாநகரின்
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், சென்னை பெருநகர
வளர்ச்சிக் குழுமம் பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு
வருகிறது.
அவ்வகையில் இன்று (25.3.2023) மாண்புமிகு சென்னை பெருநகர
வளர்ச்சி குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை
அமைச்சருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில், கடந்த 2021-2022
மற்றும் 2022-2023 சட்டமன்ற கூட்டத்தொடர் அறிவிப்புகளின் தற்போதைய
நிலை குறித்தும், 2023-2024 ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள்
தொடர்பாகவும், மூன்றாவது முழுமைத் திட்டம் – தொலைநோக்கு, நில சேர்மம்,
தள பரப்புக் குறியீடு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், நீதிமன்ற வழக்குகள்
நிலவரம், வரன்முறை திட்டம் மற்றும் கோயம்பேடு மொத்த விற்பனை வளாகம்
குறித்தும் அலுவலர்களுடன் விரிவான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச்
செயலாளர் செல்வி அபூர்வா இ.ஆ.ப., அவர்கள், சென்னை பெருநகர வளர்ச்சி
குழுமத்தின் உறுப்பினர் செயலர் திரு.அன்சுல் மிஸ்ரா இ.ஆ.ப., அவர்கள்,
தலைமை திட்ட அமைப்பாளர்கள், முதுநிலை திட்ட அமைப்பாளர்கள், மாவட்ட
வருவாய் அலுவலர்கள், மேற்பார்வை பொறியாளர்கள் மற்றும் துறை சார்ந்த
அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *