இன்று (28.3.2023) சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அலுவலகக் கூட்டரங்கில் மாண்புமிகு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் மூன்றாவது முழுமைத் திட்டம்-தொலைநோக்கு, நில சேர்மம், வரன்முறை திட்டம் மற்றும் கோயம்பேடு மொத்த விற்பனை வளாகம் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா இ.ஆ.ப., அவர்கள், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலர் திரு.அன்சூல் மிஸ்ரா இ.ஆ.ப., அவர்கள் மற்றும் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பி.கே.சேகர்பாபு தலைமையில் சென்னை பெருநகர வளர்ச்சி திட்டம்
