பி.எம். மித்ரா-பிரதமரின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

இந்தியாவில் முதலாவதாக பி.எம். மித்ரா-பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம்
மற்றும் ஆடைப் பூங்கா விருதுநகர் மாவட்டத்தில் அமைப்பதற்கான

தொடக்க விழா

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் மற்றும்
மாண்புமிகு ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள்,

உணவு, பொது விநியோகம் மற்றும் ஐவுளித்துறை அமைச்சர்
திரு. பியுஷ் கோயல் ஆகியோர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

மேற்கொள்ளப்பட்டன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும்
மாண்புமிகு ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு,
பொது விநியோகம் மற்றும் ஐவுளித்துறை அமைச்சர் திரு. பியுஷ் கோயல் அவர்கள்
ஆகியோர் முன்னிலையில் இன்று (22.3.2023) சென்னை, அண்ணா நூற்றாண்டு நினைவு
நூலக அரங்கத்தில், இந்தியாவில் முதலாவதாக பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி
மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா (PM MITRA) விருதுநகர் மாவட்டம்,
இ.குமாரலிங்கபுரத்தில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாடு
அரசிற்கும் ஒன்றிய அரசிற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டன.
மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களால் 17.3.2023 அன்று ஒருங்கிணைந்த ஜவுளி
மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா (PM MITRA) திட்டத்தின் கீழ் ஜவுளிப் பூங்காக்கள்
அமையவுள்ள 7 மாநிலங்களில் முதலாவதாக தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம், இ.
குமாரலிங்கபுரம் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் சூழலில்
விருதுநகர் மாவட்டத்திலுள்ள இ.குமாரலிங்கபுரத்தில் அமையும் சிப்காட் தொழிற்
பூங்காவினை, இம்மாவட்டம் பெற்று இருக்கும் நூற்பாலைகள், சிறு தொழில்கள் வளர்ச்சி
போன்ற கூடுதல் அம்சங்களின் அடிப்படையில் மிகவும் பொருத்தமாக இருக்கும் என
தமிழ்நாடு அரசு
பி.எம். மித்ரா திட்டத்தின் கீழ் இவ்விடத்தை தேர்வு செய்து ஒன்றிய அரசிற்கு பரிந்துரை
செய்தது.
தொழில்துறையை பொறுத்தவரை இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக
அளவிலான கவனத்தை தமிழ்நாடு ஈர்த்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், பல்வேறு

2

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அதிகளவில்
வேலைவாய்ப்பு அளிப்பதும், அதிலும் பெண்களுக்கு பெருமளவில் வேலைவாய்ப்பு
அளிப்பதால் இந்தியாவிலேயே தமிழ்நாடு தொழில் துறையில் முக்கியத்துவம் பெற்று
வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும்
ஆடைப் பூங்காவானது மொத்தம் 2,000 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் சிப்காட் மூலம்
உருவாக்கப்படும். இப்பூங்காவில், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மட்டுமின்றி,
உடனடியாக தொழில் தொடங்க ஆயத்த தொழிற் கூடங்கள் (Plug & Play Factory
Buildings), தொழில் பணியாளர்களுக்கான வீடுகள் (Industrial Housing), காற்றாலை
மற்றும் சூரிய தகடு மின் உற்பத்தியை உள்ளடக்கிய பசுமை ஆற்றல் (Green Energy
including Windmill and Solar Based Power Generation), பூஜ்ய கழிவு வெளியேற்றக்கூடிய
பொதுக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் (Zero Discharge Common Effluent Treatment Plant)
போன்ற சிறப்பு வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்படவுள்ளது. இப்பூங்கா
முழு அளவில் செயல்படும் போது சுமார் 2,00,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்
பெறும்.
இப்பூங்காவில் தொழில் தொடங்குவதற்கு 7 பெரும் தொழில் நிறுவனங்களுடன்
தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனமும், 4 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுடன்
துணிநூல் துறையும், என மொத்தம்
11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம்
1,231 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்படுவதுடன் 6,315 நபர்களுக்கு வேலைவாய்ப்பும்
உருவாக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கிடைக்கப்பெறும் அனைத்து வாய்ப்புகளையும்,
தொழில் நிறுவனங்களும் தொழில் முனைவோர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
இதன்மூலம் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவில், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மாண்புமிகு தொழில், முதலீட்டு
ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர்
திரு. தங்கம் தென்னரசு, மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர்
திரு. கே.ஆர். பெரியகருப்பன், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்
திரு. ஆர். காந்தி, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.

3

மா. சுப்பிரமணியன், மாண்புமிகு ஒன்றிய தகவல் ஒளிபரப்பு, மீன்வளம், கால்நடை
பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன், மாண்புமிகு
ஒன்றிய ஜவுளி மற்றும் இரயில்வே துறை இணை அமைச்சர் திருமதி தர்ஷனா விக்ரம்
ஜர்தோஷ், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர். பிரியா, சட்டமன்ற
உறுப்பினர் திருமதி வானதி சீனிவாசன், துணை மேயர் திருமதி மு. மகேஷ் குமார்,
தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., ஒன்றிய ஜவுளி
அமைச்சகத்தின் செயலாளர் திருமதி ரச்சனா ஷா, இ.ஆ.ப., தொழில், முதலீட்டு
ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.ச.கிருஷ்ணன்,
இ.ஆ.ப., கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர்
திரு. தர்மேந்திர பிரதாப் யாதவ், இ.ஆ.ப., சிப்காட் மேலாண்மை இயக்குநர் திருமதி எ.
சுந்தரவல்லி, இ.ஆ.ப., முதலீட்டாளர்கள் – தென்னிந்திய ஆலைகள் சங்கத்தின் தலைவர்
திரு. ரவி ஷாம், இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்புத் தலைவர்
டாக்டர் எ.சக்திவேல், தியாகராஜா மில்ஸ் குழுமத்தின் செயல் இயக்குநர்
திரு.ஹரிதியாகராஜன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *