சென்னை, அக்.18
தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின், இணைப்புக்கு விண்ணப்பிக்காத கல்லூரிகள், மாணாக்கர்களை பட்டப்படிப்பில் சேர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது
ஆசிரியர் கல்வியியல் பல்கலை வெளியிட்ட அறிவிப்பில், “ஆசிரியர் கல்வியியல் பல்கலையுடன் இணைப்பு அந்தஸ்து பெற்றுள்ள பி.எட், எம்.எட் படிப்பு நடத்தும் கல்லூரிகள், ஒவ்வொரு படிப்புக்கும் தனித்தனியாக இணைப்பு தகுதி பெற வேண்டும்.
இணைப்புக்கு விண்ணப்பிக்காத கல்லூரிகள் மாணாக்கர்களை சேர்க்கக்கூடாது” என்று கூறப்பட்டுள்ளது.