பிரியங்கா காந்தி போட்டியிடக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன

திருவனந்தபுரம்: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படதால் அவர் வென்ற வயநாடு லோக்சபா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலி ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டு அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மக்கள் பிரதிநித்துவ சட்டப்படி 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.  பாக்யாவிற்கு டாஸ்க் கொடுத்த ராதிகா.. தோள் கொடுத்து பழனிச்சாமி செய்யும் செயல்… கடுப்பாகும் கோபி இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் இன்று டெல்லியில் கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது. இந்த தேர்தல் தேதி அறிவிப்பின் போது ராகுல் காந்தி வென்ற வயநாடு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்படக் கூடும் என கூறப்படுகிறது.  கண்மூடித்தனமாக எடப்பாடியை எதிர்க்கிறேனா? – ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் கேரளாவின் வயநாடு தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வருகிறது. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ராகுல் காந்தி காங்கிரஸின் பாரம்பரிய தொகுதியான உபியின் அமேதி மற்றும் கேரளாவன் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இந்திரா குடும்பத்தில் சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி வென்ற தொகுதிதான் அமேதி. ஆனால் 2019-ம் ஆண்டு தேர்தலில் அமேதியில் ராகுல் காந்தி தோல்வியைத் தழுவினார்ஆனால் வயநாடு தொகுதியில் வரலாறு காணாத வெற்றியை பெற்றார். வயநாடு லோக்சபா தொகுதியில் ராகுல் காந்தி 64.67% வாக்குகளைப் பெற்று மிரட்டலான வெற்றி வாகை சூடினார். ராகுலை எதிர்த்து போட்டியிட்ட சிபிஐ-க்கு 25% வாக்குகள்தான் கிடைத்தது. 2வது கல்யாணம்.. தாலியோடு ஜாலியாக காத்திருந்த கணவன்.. மனைவி சர்ப்ரைஸ் என்ட்ரி.. தெறித்து ஓடிய ஜோடி இந்த நம்பிக்கையில் தற்போது வயநாடு லோக்சபா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றால் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி, போட்டியிடக் கூடும் எனவும் கூறப்படுகிறது. பிரியங்கா காந்தியின் தேர்தல் வெற்றியானது அவரை இன்னொரு இந்திரா காந்தியாக உருவாக்கக் கூடும் என்பதால் அவருக்கு முக்கியத்துவம் தருகிறோம் என்பது காங்கிரஸ் கட்சியினர் கருத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *