சென்னை: பிரதமர் மோடி சென்னைவர உள்ளநிலையில், தமிழக அரசியல் கட்சி தலைவர்களின் சந்திப்புகள் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.. இதனால், தமிழக அரசியலில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
சென்னை விமான நிலையத்தில் ரூ. 2,400 கோடி மதிப்பில், 2.36 லட்சம் சதுர மீட்டரில் ஒருங்கிணைந்த விமான முனையம் கட்டப்பட்டு வருகிறது. அதன் முதல்கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில் பயணிகள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவுள்ளனஇதற்கு பிறகு, பயணிகளின் எண்ணிக்கை 2.20 கோடியில் இருந்து, 3.50 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஒருங்கிணைந்த விமான முனையம் 5 தளங்களுடன் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. கீழ் தளத்தில், பயணியர் உடைமைகள் கையாளப்படுகின்றன.முதல் தளத்தில் சர்வதேச பயணிகள் வருகையும், இரண்டாவது தளத்தில் பயணிகள் புறப்பாடு நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்நிலையில், மார்ச் 27-ம் தேதி காலை ராமேஸ்வரம் வருகிறார் பிரதமர் மோடி.. அங்கு காசி தமிழ் சங்கமத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த 2,500 பேரையும் கௌரவிக்க உள்ளார்.. அதற்கு பிறகு சென்னை ஏர்போர்ட்டில் நடைபெறும் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புதிய விமான முனைய கட்டிடத்தை திறந்து வைக்கிறார். இதில், முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்..
இவைகள் எல்லாம் அரசு முறைப்படியான திட்டங்கள், பணிகள் என்றாலும், பிரதமரின் வருகையில் சில முக்கிய நிகழ்வுகள் நடக்க போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.. குறிப்பாக, தமிழக அரசியல் கட்சி தலைவர்களின் தனிப்பட்ட சந்திப்புகள் பிரதமருடன் நடக்கலாம் என்கிறார்கள்.. அந்தவகையில், முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தெரிகிறது.. ஏர்போர்ட் திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலினும் பங்கேற்கிறார் என்றாலும், பிரதமர் மோடியை அதற்கு பிறகு தனியாக சந்தித்து சில கோரிக்கைகள் குறித்து பேச உள்ளாராம்.. அதாவது, மார்ச் 20ம் தேதி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.அதில் அறிவிக்கப்படும் திட்டங்களுக்கு மத்திய நிதி ஒதுக்கீடு, ஆன்லைன் ரம்மி தடை, நீட் தேர்வு விலக்கு, ஜிஎஸ்டி நிலுவை தொகை குறித்த கோரிக்கைகளை பிரதமரிடம் வலியுறுத்த முதல்வர் திட்டமிட்டுள்ளாராம்.. எனவே, சென்னை வரும் பிரதமர் மோடியை தனியே சந்தித்து சில விவகாரங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசவிருப்பதாக தெரிகிறது.. அதேபோல, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ்ஸும் தனித்தனியாக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார்களாம்.. வழக்கமான, ஒவ்வொரு முறை பிரதமர் மோடி சென்னை வரும்போதெல்லாம், எடப்பாடி + ஓபிஎஸ் இருவருமே சந்தித்து பேச முயற்சிப்பார்கள்.. முற்றுப்புள்ளி எனினும், இவ்வளவு காலம் ஒற்றை தலைமை விவகாரம் மட்டுமே அதிமுகவில் தலைதூக்கியிருந்த நிலையில், இப்போது அதிமுக – பாஜக மோதலும் சேர்ந்துள்ளது.. இரு கட்சிகளின் கூட்டணி தொடரும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டாலும்கூட, அதிருப்திகள் இன்னமும் நிலவிக் கொண்டுதான் இருக்கிறது.. சில நாட்களுக்கு முன்பு, பாஜக தேசிய தலைவர் நட்டா தமிழகம் வந்தபோதுகூட, அதிமுக – பாஜக விவகாரம் குறித்து தலையிட்டு பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், அப்படி எதுவுமே சமாதான முயற்சி நடக்கவில்லை என தெரிகிறது.. அதனால், இந்த முறை பிரதமர் சென்னை வரஉள்ளதால், இந்த விவகாரம் குறித்து பேசப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. ஹோப் பழனிசாமி சென்னை வரும்போது தமிழக தலைவர்கள் சிலரை சந்திப்பது பிரதமரின் வழக்கம்தான் என்றாலும், இந்த முறை பிரதமர் மோடி மத்திய அரசின் திட்டங்களை துவக்கி வைக்க வருகிறார்.. இதனால் அரசியல் ரீதியான சந்திப்புகளை தவிர்த்து விடுவார் என்கிறார்கள்.. பிரதமரை சந்திக்க பழனிசாமியும், ஓபிஎஸ்ஸும் அனுமதி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால், மீண்டும் அதிமுக – பாஜக விவகாரம் சூடுபிடித்துள்ளது.. கடந்த முறை பிரதமர் சென்னை வந்தபோது, மாஜி அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பேட்டி தந்திருந்தார்.. “சென்னையில் பிரதமர் மோடியை, எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி சென்று சந்திப்பார் என்று அன்று ஜெயக்குமார் சொல்லியிருந்த நிலையில், அப்படி ஒரு சந்திப்பே கடைசிவரை நடக்காமல் போய்விட்டது.. இதற்கான காரணமும் தெரியவில்லை.. அப்பாயிண்ட்மென்ட்
பிரதமர் மோடி சென்னைவர உள்ளநிலையில்,கட்சி தலைவர்களின் சந்திப்புகள் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது..
