பாலியல் தொழில்: பாஜக செயற்குழு உறுப்பினர் கைது

விழுப்புரம், அக்.17

விழுப்புரம் ஆரோவில் அருகே இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த பாஜக பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

சென்னை போன்ற நகரங்களுக்கு வேலைக்கு வரும் இளம் பெண்களிடம், புதுச்சேரி பாஜக மகளிர் அணி செயற்குழு உறுப்பினர் வேளாங்கண்ணி ஆசை வார்த்தைக் கூறி பாலியல் தொழிலில் தள்ளியது குறித்து, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில், நடத்தப்பட்ட சோதனையில் 10க்கும் மேற்பட்ட பெண்களுடன் வேளாங்கண்ணி, கையும் களவுமாக மாட்டிக்கொண்டார்

Leave a Reply

Your email address will not be published.