பாலகிருஷ்ணா ஜோடியாக 3 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். 60 வயதை கடந்த பாலகிருஷ்ணா, தெலுங்கு சினிமாவில் இப்போதும் வசூல் மன்னராக திகழ்கிறார். அவர் கடைசியாக நடித்த அகண்டா, வீர சிம்ஹா ரெட்டி ஆகிய படங்கள் தலா ரூ.200 கோடி வசூலை தாண்டி சாதித்தது. அவருக்கு இளம் ஹீரோயின்கள் ஜோடியாக நடிப்பதாகவும் அவரை விட வயது குறைந்த நடிகைகள் அவருக்கு அம்மாவாக நடிப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தாலும் ரசிகர்கள் அவரது படங்களையும் இந்த மாற்றங்களையும் ரசிக்கிறார்கள்.
இதனால் தொடர்ந்து இளம் ஹீரோக்களுக்கு பாலகிருஷ்ணா கடும் சவாலாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் பாலகிருஷ்ணாவின் 108வது படத்தை அனில் ரவிபுடி இயக்குகிறார்.
இதில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால், ஹனிரோஸ், பிரியங்கா ஜவால்கர் என 3 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். லீலா, பாலகிருஷ்ணாவின் தங்கை வேடத்தில் நடிக்க இருக்கிறாராம். இந்த படமும் முழு நீள ஆக்ஷன் படமாக உருவாகிறது. இந்த படத்துக்கு தமன் இசையமைக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் படத்தை வௌியிட திட்டமிட்டுள்ளனர்.
பாலகிருஷ்ணா ஜோடியாக 3 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள்.
