வெளியான ‘பூவிழி வாசலிலே’, ‘சூரியன்’ ஆகிய படங்களில் மலையாள நடிகர் பாபு ஆண்டனியின் நடிப்பு தனித்துவமாக இருக்கும். அவரது வில்லத்தனம் இன்றளவும் பேசப்படுகிறது. ‘பொன்னியின் செல்வன் 1’ படத்தில் சில காட்சிகளில் தோன்றிய அவர், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தில் முக்கிய வேடம் ஏற்றுள்ளார். இதுகுறித்து பாபு ஆண்டனி கூறுகையில், ‘காஷ்மீரில் நடந்து முடிந்த ஷூட்டிங்கில் விஜய் என்னிடம் பணிவுடன் நடந்துகொண்டார்.
அதிக அன்பு செலுத்தினார். நான் நடித்த ‘பூவிழி வாசலிலே’, ‘சூரியன்’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ ஆகிய படங்களை அவர் பார்த்ததாகவும், அப்படங்களில் எனது நடிப்பை மிகவும் ரசித்ததாகவும் சொன்னார். முன்னணி ஹீரோவான அவரிடம் இருந்து இதுபோன்ற பாராட்டு வார்த்தையைக் கேட்டது ஆச்சரியமாகவும், என்றைக்கும் மறக்க முடியாததாகவும் இருந்தது’ என்றார்.