பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்’

சென்னை: பால் மற்றும் பால் பொருட்கள் விலையை தொடர்ச்சியாக உயர்த்திய தமிழ்நாடு அரசு, பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்’ என்ற உற்பத்தியாளர்கள் கோரிக்கைக்கு மட்டும் செவி சாய்க்காமல் இருப்பது ஏன் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிட்டு, பேச்சுவார்த்தை மூலம் சுமூக உடன்படிக்கை ஏற்படுத்த வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும் பாலுக்கு லிட்டருக்கு ரூ. 7 கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். by  இதனைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்திய பால்வளத்துறை அமைச்சர் நாசர், தொடர்ந்து பால் உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.  Video ADMK – VCK கூட்டணி : உண்மையை உடைத்த  அரசுக்கு கெட்ட பேரு ஏற்படுத்த பார்க்குறாங்க.. அமைச்சர் நாசர் கோபம்! பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இன்று முதல் பால் நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி ஆவினுக்கு பால் வழங்கப் போவதில்லை என உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளதால் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் வாழப்பாடி ராஜேந்திரன் கூறுகையில், தமிழ்நாட்டில் உள்ள 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆவினுக்கு நாள் ஒன்றுக்கு 27.5 லட்சம் லிட்டர் பால் அனுப்பப்படுகிறது. யானைப்பசிக்கு சோளப்பொறி இதில் 2.5 லட்சம் லிட்டர் பால், நெய் உள்ளிட்ட பால் பொருட்கள் தயாரிக்க எடுத்துக் கொள்ளப்படுகிறது. மீதமுள்ள பால் ஆவின் நிறுவனத்தின் மூலம் நுகர்வோருக்கு விநியோகிக்கப்படுகிறது. தற்போது அரசு பசும்பாலை ரூ.35க்கும், எருமை பால் ரூ.44க்கும் கொள்முதல் செய்கிறது. இது யானைப்பசிக்கு சோளப்பொறி போன்றதாக உள்ளது. இந்த விலை உயர்வு போதாது என்றும் அப்போதே தமிழ்நாடு அரசுக்கு தெரியப்படுத்தினோம். குறைந்தபட்சம் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி தரும்படி கேட்டோம். தனியாருக்கு பாலை மடைமாற்றுவோம் பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.42-ம், எருமைப்பாலுக்கு ரூ.51-ம் வழங்கும்படி கேட்டிருந்தோம். ஆனால், அரசு எங்கள் கோரிக்கை மீது எந்த தீர்வும் காணவில்லை. எனவே, இன்று முதல் ஆவின் நிறுவனத்துக்கு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக முதல் பால் அனுப்பமாட்டோம். ஒரு கட்டத்தில் ஆவினுக்கு பால் கொள்முதல் முற்றிலும் தடைபடும். அரசு தீர்வு காணவில்லை என்றால், எங்கள் பாலை தனியார் நிறுவனத்துக்கு மடைமாற்றிவிடுவோம். தனியார் நிறுவனங்கள் ஏற்கனவே உள்ள விலையில் 10 ரூபாய் கூடுதலாக கொடுத்து பாலை கொள்முதல் செய்துகொள்ள தயாராக இருக்கிறார்கள் என்று தெரிவித்தார். செவி சாய்க்காத அரசு இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி, பால் உற்பத்தியாளர்கள் இன்று முதல் போராட்டம் அறிவித்துள்ளனர். ஆட்சிக்கு வந்தவுடன், பால் மற்றும் பால் பொருட்கள் விலையை தொடர்ச்சியாக உயர்த்திய திறனற்ற திமுக அரசு, பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்’ என்ற உற்பத்தியாளர்கள் கோரிக்கைக்கு மட்டும் செவி சாய்க்காமல் இருப்பது ஏன்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *