பாகிஸ்தான் மண்ணில் இந்தியா விளையாடாது பிசிசிஐ முடிவு

பாகிஸ்தான் மண்ணில் இந்தியா விளையாடு என்றும் முடிவெடுத்த இந்திய கிரிகேட் வாரியம்

அதேபோல அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடரை வேறு பொதுவான இடத்திற்கு மாற்ற ஐசிசி-யிடம் கோரிக்கை வைக்கவும், அப்படி இல்லை என்றால் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் தொடரில் இந்திய அணி பங்கேற்க வேண்டாம் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.அதேபோல இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக உலக கோப்பை வென்ற முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் ரோஜர் பின்னி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவர் பொறுப்பை வகித்து வந்தார். 2019 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி அவர் பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படவில்லை.
பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பையில் இந்திய பங்கேற்காது என இன்று நடைபெற்ற பிசிசிஐ கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

2022-2023 ஆம் ஆண்டிற்கான பிசிசிஐ பொதுக்குழு கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் மகளிருக்கான ஐபிஎல் தொடரை துவங்க ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் மகளிருக்கான ஐபிஎல் தொடரை துவங்கி நடத்தவும், 5 அணிகள் கொண்ட தொடராக நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published.