பதறிய எடப்பாடி பழனிச்சாமி.. முதல்வர் காப்பார் என கூல் செய்த மா.சுப்ரமணியன் .

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்பாக சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். தமிழ்நாட்டில் கொரோனா பரவல் லேசாகவே இருப்பதாகவும் கொரோனா அலை வந்தாலும் முதல்வர் காப்பார் என அமைச்சர் மா.சுப்ரமணியம் விளக்கம் அளித்தார்.நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 5000 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டு பிரசுரங்களை வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்பாக பேரவையில் எடப்பாடி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். கொரோனா மரணங்கள் அதிகரித்து வருவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த கவனஈர்ப்பு தீர்மானத்துக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார். கொரோனா பரவல் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு மக்கள் மாஸ்க் அணிந்து செல்வது நல்லது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் முககவசத்தை மருத்துவமனைகளில் கட்டாயமாக்கியுள்ளோம் என்றும் அமைச்சர் கூறினார்.கொரோனா இரண்டாவது அலையின் போது ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது போல இனி ஏற்பட வாய்ப்பு இல்லை என்று கூறிய மா.சுப்ரமணியன், தற்போது கொரோனா பரவல் லேசாக உள்ளதாக கூறினார். கொரோனா அலை பரவினாலும் முதல்வர் மு.க ஸ்டாலின் மக்களை காப்பார் என்றும் தெரிவித்தார். கொரோனா மரணங்கள் அதிகரிக்கவில்லை என்றும் இணை நோய் உள்ளவர்கள்தான் மரணமடைந்துள்ளனர் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார். நோய் பரவலை தடுக்கவும், கொரோனாவால் ஏற்படும் மரணங்களை தடுக்கவும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் சட்டசபையில் கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *