பட்ஜெட்டை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தாக்கல் செய்தார்.

சென்னை: 5 வருடங்களுக்கு மேல் நிலுவை வைத்துள்ள சொத்து உரிமையாளர்கள் முழு வரியை செலுத்தினால் 20 சதவீதம் சலுகை வழங்கலாம் என சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2023-2024-ம் நிதியாண்டிற்கு சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா கடந்த 27ம் தேதி ரிப்பன் பில்டிங்கில் தாக்கல் செய்தார். by TaboolaSponsored Links Second income opportunity for Indians. Resurveyed Extra income chance for Senior Indians. Insistent savings அப்போது மேயர் ஆர்.பிரியா இந்த நிதியாண்டுக்கான 82 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். கல்வி, சுகாதாரம், மழைநீர் வடிகால் பணிகள், பூங்கா பராமரிப்பு, மக்களை தேடி மேயர், சாலைகளை மறுசீரமைப்பு செய்தல் உள்ளிட்டவைகள் குறித்து பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டிருந்தார்,. இதேபோல, 2022-23-ம் நிதியாண்டை காட்டிலும் இந்த நிதியாண்டில் பற்றாக்குறை ரூ.334 கோடி அளவில் குறைந்திருக்கிறது. Recommended Video “Adaniக்காக மோடி எதையும் செய்வார்” மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் எம்.பி. மாத சம்பளம் வாங்குவோருக்கு குட்நியூஸ்.. புதிய வருமான வரி முறையில் சின்ன திருத்தம்..25000 சேமிப்பு சொத்து வரி நிலுவை இதைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் ரிப்பன் மாளிகை கட்டிடத்தின் கூட்ட அரங்கில் செவ்வாய்கிழமை நடந்நது. இந்த கூட்டத்தில் பட்ஜெட் மீதான உறுப்பினர்களின் விவாதத்துக்கு பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, பிரதான வருவாயாக சென்னை மாநகராட்சிக்கு சொத்துவரி உள்ளது. நடப்பு 2-ம் அரையாண்டு துவக்கத்தில் சொத்துவரி நிலுவை தொகை ரூ.674.27 கோடியாக உள்ளது. 10 வருடங்களுக்கு மேல் உள்ள 44,436 சொத்துடனைதாரர்களின் நிலுவை தொகை ரூ.245.31 கோடியாக உள்ளது. முழு சொத்துவரி எனவே, 5 வருடங்களுக்கு மேலாக சொத்துவரி நிலுவை வைத்துள்ள சொத்து உரிமையாளர்கள், 3 மாத காலத்திற்குள் நிலுவையில் உள்ள முழு சொத்துவரியினை செலுத்தும் நேர்வில், சிறப்பு நிகழ்வாக 20 சதவீதம் வரி சலுகை அளிக்கும் விதமாக அரசாணை வெளியிட தமிழக அரசை கோரலாம். 66 தீர்மானங்கள் மெரினா கடற்கரை காமராஜர் சாலை, அண்ணா சாலையையும் இணைக்கும் பிரதான சாலையாக உள்ள அவ்வை சண்முகம் சாலையில், மெரினா கடற்கரை காமராஜர் சாலை முதல் இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் வரை உள்ள சாலை பகுதியினை ‘வி.பி.ராமன் சாலை’ என பெயர் மாற்றம் செய்து அனுமதி பெறுவது உள்ளிட்ட 66 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. கவுன்சிலர் வார்டு மேம்பாடு நிதி முன்னதாக சென்னை நிலைக்குழு தலைவர் (கல்வி) விஸ்வநாதன் பேசும் போது, “தமிழ்நாடு பட்ஜெட்டில் எப்படி சுகாதாரம், கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதோ அதுபோல சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் கல்விக்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதியை ரூ.70 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். கடந்த அ.தி.மு.க.ஆட்சி காலத்தில் சென்னையில் உள்ள 200 வார்டுகளில் உள்ள பூங்காக்களையும், நீச்சல் குளங்களையும் ஒரே ஒப்பந்ததாரர் குத்தகைக்கு எடுத்துள்ளார். இதனால், மாநகராட்சிக்கு ரூ.3 கோடியே 27 லட்சத்து 24 ஆயிரம் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆட்சிகாலத்தில் அவர்களுக்கு துணையாக இருந்த அதிகாரியை கண்டுபிடித்து அவர் மூலமாகவே இழப்பீட்டை வசூலிக்க வேண்டும் என்றார். 00:00 / 02:30 குறை சொல்லாதீங்க இதற்கு பதில் அளித்த துணை மேயர் மகேஷ்குமார், எழுத்துப்பூர்வமாக ஆணையரிடம் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் குறை சொல்ல வேண்டாம் என்றார். அதற்கு விஸ்வநாதன், ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக மேயரிடமும், ஆணையரிடமும் புகார் தந்துள்ளேன். மாநகராட்சிக்கு ஏற்பட்ட இழப்பை நீங்கள் வசூலிக்க வேண்டும். வரக்கூடிய காலங்களில் யாராக இருந்தாலும் ஒரு ஒப்பந்ததாரருக்கு ஒன்று அல்லது 2 பூங்காக்களை மட்டுமே ஒப்பந்தம் கொடுக்க வேண்டும் என்றார். அதற்கு மேயர் ஆர்.பிரியா பதில் அளித்து பேசுகையில், சென்னை மாநகராட்சி என்பது அதிகாரிகள், கவுன்சிலர்கள் என இருவரும் கலந்து வேலை செய்ய வேண்டும். அதிகாரிகள் குறித்து கவுன்சிலர்கள் ஏதாவது புகார்கள் சொல்ல வேண்டும் என்று நினைத்தால் என்னிடமோ அல்லது கமிஷனரிடமோ தனியாக கூறுங்கள். கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகளுடன் சேர்ந்து தான் நாம் வேலை செய்து வருகிறோம் . எனவே அதிகாரிகளை குறைசொல்ல வேண்டாம் என்றார்

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/chennai-corporation-great-news-to-property-owners-over-property-tax/articlecontent-pf887925-504987.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *