படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் போட்டித் தேர்வுக்கான பயிற்சி

படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில்போட்டித் தேர்வுக்கான பயிற்சிTNPSC, SSC, IBPS மற்றும் RRB ஆகிய போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும்
போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள்,
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தில் 200 நபர்களுக்கு பயிற்சிகள்
வழங்கப்படுகிறது.தற்போது, மேற்படி போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும்
தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு, புதிதாக இணையவழி மூலம்
விண்ணப்பங்கள் பெற்று சேர்க்கை நடைபெற உள்ளது. மாலை 5.30 மணி முதல்
8.30 மணி வரை ஆறு மாத காலம் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.
இப்போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் உணவு மற்றும் தங்கும் வசதிகள் இல்லை.
1. தகுதிஅ. குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆ. 01.01.2023 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
இ. தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
2. விண்ணப்பிக்கும் முறை
பயிற்சி பெற விரும்புவோர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக
இணையதளமான https://tnau.ac.in/cecc/ மூலம் இணையவழியாக 31.03.2023
வரை விண்ணப்பிக்கலாம். மேலும், பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களை
முழுமையாக சரிபார்த்த பின்னர் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இணைய வழி மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின் திருத்தம் கோரி
பெறப்படும் எந்த ஒரு கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
3. அழைப்புக் கடிதம்
பயிற்சி வகுப்புக்கான அழைப்புக் கடிதம், தமிழ்நாடு வேளாண்மைப்
பல்கலைக்கழக இணையதளம் https://tnau.ac.in/cecc/ இல் பதிவேற்றம்
செய்யப்படும். இதனை சேர்க்கையின்போது அவசியம் எடுத்துவர வேண்டும்

விண்ணப்பதாரர்களுக்கான சேர்க்கை குறித்த நாள் மற்றும் நேரம்
இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். அழைப்புக் கடிதம் அஞ்சல் மூலம்
அனுப்பி வைக்கப்பட மாட்டாது.
4. தெரிவு செய்யும்முறை

பத்தாம் வகுப்பு மொத்த மதிப்பெண் அடிப்படையில் தெரிவு செய்ப்பட்ட
தேர்வுகள் பயிற்சி மையத்தில் இனவாரியாக உள்ள இடங்களுக்கு ஏற்ப
நேரடியாக பயிற்சிக்கு அழைக்கப்படுவர்.
5. உணவு மற்றும் தங்கும் வசதிகள் இப்பயிற்சி மையங்களில் இல்லை.
6. வகுப்பு நேரம்

தேர்வுர்கள் பயிற்சிக்கு தினமும் வந்து செல்லும் வகையில் மாலை 5.30
மணி முதல் 8.30 மணி வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை நடைபெறும்.
பயணப்படிகள் வழங்கப்பட மாட்டாது. வருகைப்பதிவு மிகவும் அவசியம்.
7. பயிற்சி வகுப்பிற்கான சேர்கைக்கு இட ஒதுக்கீட்டு விவரங்கள்

இனம் ஒதுக்கீடு விபரம்
பொது 31%
பிற்படுத்தப்பட்டோர் 26.5%
பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் 3.5%
மிகவும் பற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்
(DNC)

20%

ஆதி திராவிடர் 15%
அருந்ததியர் 3%
பழங்குடியினர் 1%
மொத்தம் 100%
சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ் கோரும் உரிமைகளுக்கான தகுதிகள்
இவ்வறிக்கை நாளன்று இருக்க வேண்டும் மற்றும் தகுதி வாய்ந்த
அலுவலரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வருமான
சான்றிதழ் சேர்க்கையின்போது சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 0422 – 6611242 / 6611442 என்ற
தொலைபேசியிலும் cecctnau@tnau.ac.in என்ற மின்னஞசல் முகவரியிலும்
தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *