பகத்சிங் தூக்கிலடப்பட்ட ஈக நாளையொட்டி நாளை மார்ச் 25 ஆம் நாள் முற்பகல் 11 மணி அளவில் கதீட்ரல் கார்டன் சாலையில் ஒன்றுகூடி ”பங்குச் சந்தை சூதாடி அதானியின் கூட்டாளி மோடியே பதவி விலகு !” என்ற முழக்கத்தோடு நுங்கம்பாக்கத்தில் உள்ள அதானி போர்ட்ஸ் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் என்ற அதானியின் நிறுவன அலுவலகத்தை பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி சார்பாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளோம். பாஜக அரசே, அதானியைக் கைது செய், சொத்துகளைப் பறிமுதல் செய்! என்ற கோரிக்கைகளும் திமுக அரசே, அதானி குழுமத்துடன் போட்டுக்கொண்டுள்ள மக்கள் விரோத ஒப்பந்தங்களைத் திரும்பப் பெறு! என்ற கோரிக்கையும் எழுப்பப்படுகிறது. பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி சார்பாக தோழர் சேல்முருகன் தலைமையேற்கிறார். பா.எ.ம. முன்னணியின் உறுப்பு அமைப்புகளின் தலைவர்களும் நிர்வாகிகளும் கலந்துகொள்கின்றனர்.இந்நிகழ்வுக்கு தங்கள் ஊடகத்தின் சார்பாக புகைப்படக்காரரையும் செய்தி சேகரிப்பாளரையும் அனுப்பி வைத்து இச்செய்தியை மக்களுக்கு கொண்டு செல்லவுதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பங்குச் சந்தை சூதாடி அதானியின் கூட்டாளி மோடியே பதவி விலகு !”
