பங்குச் சந்தை சூதாடி அதானியின் கூட்டாளி மோடியே பதவி விலகு! அதானி அலுவலகம் முற்றுகை

பகத்சிங் தூக்கிலடப்பட்ட  ஈக நாளையொட்டி இன்று மார்ச் 25 ஆம் நாள் முற்பகல் 11 மணி அளவில் நுங்கம்பாக்கத்தில் உள்ள கதீட்ரல் கார்டன் சாலையில் ஒன்றுகூடி ”பங்குச் சந்தை சூதாடி அதானியின் கூட்டாளி மோடியே பதவி விலகு !” என்ற முழக்கத்தோடு  நுங்கம்பாக்கத்தில் உள்ள அதானி போர்ட் அண்ட்  லாஜிஸ்டிக்ஸ்  என்ற அதானியின் நிறுவன அலுவலகத்தை  பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி சார்பாக முற்றுகையிடும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சுமார் 300 பேர் இந்த போராட்டத்தில் அணிதிரண்டிருந்தனர்.எழுச்சிப் பறை முழக்கத்துடன் முற்றுகைப் போராட்டம் தொடங்கியது. பின்னர், மாவீரன் பகத் சிங் நினைவைப் போற்றிப் பாடலொன்று பாடப்பட்டது.   பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி சார்பாக மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தைச் சேர்ந்த தோழர் சேல்முருகன் இவ்வார்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று உரையாற்றினார்.இவ்வார்ப்பாட்டத்தில் பின்வரும் கோரிக்கைகளின் அடிப்படையில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.பாசிச பாசக அரசே!

மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த அதானியைக் கைது செய்!

அதானி குழுமத்தின் சொத்துகளைப் பறிமுதல் செய்!

அதானிக்கு துணைபோன செபி, ரிசர்வ் வங்கி, எஸ்.பி.ஐ., எல்.ஐ.சி. போன்ற நிறுவனங்களின் உயர் அதிகாரிகளைக் கைது செய்!

அதானி,  அம்பானி போன்ற கார்ப்பரேட்களுக்கு கடன் வழங்குவதை நிறுத்து! சிறுகுறு தொழில்களுக்கு, உழவர்களுக்கு, மக்கள்நலத் திட்டங்களுக்கு நிதி வழங்கு!

அதானி குழுமப் பங்குசந்தை மோசடிக்கு காரணமான உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகளைக் கைவிடு!

திமுக அரசே!அதானி குழுமத்துடன் போட்டுக் கொண்டுள்ள மக்கள் விரோத ஒப்பந்தங்களைத் திரும்பப் பெறு!

தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் தலைவர்  அரங்க குணசேகரன், பாட்டாளி வர்க்க சமரன் அணியின் மாநில அமைப்பாளர் மணி, மக்கள் அதிகாரத்தின் மாநிலச் செயலாளர் வெற்றிவேல் செழியன் ஆகியோர் உரையாற்றினர். அதானி அலுவலகத்தை முற்றுகையிட முனைந்த போராட்டக்காரர்களில் சுமார் 150 பேரை காவல்துறை கைது செய்து பின்னர் மாலையில் விடுவித்தது.பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொறுப்பாளருமான பாலன், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு,சிபிஐ(எம்-எல்) செந்தாரகையின் மாநிலச் செயலாளர் மனோகரன், மக்கள் சனநாயக குடியரசு கட்சியின் பொறுப்பாளர் துரை சிங்கவேல், மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணியின் மாநிலப் பொறுப்பாளர் ஞானம், தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியின் செயலாளர் செல்வமணி, தமிழ்த்தேச இறையாண்மையின் செயலாளர் பாரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( எம்-எல்) இன் மாநிலச் செயலாளர் குணாளன்  , ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் பொறுப்பாளர் பார்த்திபன், புரட்சிகர மக்கள் பாசறையின் செயலாளர் காளான்துரை, , தமிழக மக்கள் முன்னணியைச் சேர்ந்த தோழர் பாவேந்தன், ஐந்திணை மக்கள் கட்சியின் செயலாளர் ஸ்டீபன் ராஜ், தமிழர் முன்னணியின் செயலாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், பெரியார் அம்பேத்கர் மக்கள் கழகத்தைச் சேர்ந்த ரவி, புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் தினேஷ்குமார், தலித் விடுதலை இயக்கத்தின் தலைவர் கருப்பையா, திராவிடர் ஒன்றிய சமத்துவக் கழகத்தின் செயலாளர் தகடூர் சம்பத், தொழிலாளர் சீரமைப்பு இயக்கத்தைச் சேர்ந்த சேகர், தமிழ்நாடு பொதுவுடமை இயக்கத்தைச் சேர்ந்த தோழர் பத்மநாபன், சுய ஆட்சி இயக்கத்தைச் சேர்ந்த தோழர் லில்லி மேரி பாய், அம்பேத்கர் பொதுவுடமை முன்னணியின் மாநிலக் குழு உறுப்பினர் சாலமன், தமிழரசுக் கழகம்(கட்சி)யின் செயலாளர் தமிழ்ச்செல்வன், அம்பேத்கர் மக்கள் படையின் தலைவர் மதிபறையனார்,  தலித் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் அன்பில் பொய்யாமொழி உள்ளிட்டோர் முற்றுகைப் போராட்டத்தில் பங்குபெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *