நித்தி ஆயோக் துணைத் தலைவர் மற்றும் நித்தி ஆயோக் குழுவினர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுடன்சந்திப்பு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை
இன்று (21.03.2023) தலைமைச் செயலகத்தில், நித்தி ஆயோக் அமைப்பின்
துணைத் தலைவர் திரு. சுமன் குமார் பெர்ரி மற்றும் உயர் அலுவலர்கள்
கொண்ட குழு சந்தித்து, அந்த அமைப்பின் முக்கிய முயற்சிகளான நீடித்த
வளர்ச்சி இலக்குகள் மற்றும் முன்னேற விழையும் மாவட்டங்கள் (Aspiration
Districts) திட்டம் ஆகியன குறித்து கலந்தாலோசித்தனர்.
இச்சந்திப்பின்போது, மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள
மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன்,
தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., மாநிலத்
திட்டக்குழுவின் துணைத்தலைவர் முனைவர் ஜெ.ஜெயரஞ்சன், நிதித் துறை
கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப., திட்டம்
மற்றும் வளர்ச்சித் துறை சிறப்புச் செயலாளர் திரு.த.சு.ராஜ்சேகர், இ.ஆ.ப.,
மாநிலத் திட்டக்குழுவின் உறுப்பினர் செயலர் (மு.கூ.பொ) திருமதி சுதா,
இ.வ.ப., நித்தி ஆயோக் ஆலோசகர்
திரு. பார்த்தசாரதி ரெட்டி, துணைத் தலைவரின் தனிச்செயலர்
திரு. ஏ. முத்துகுமார், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள்
உடனிருந்தனர்.
•••••••••••