நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் வைகோ எழுப்பிய கேள்வி

தெருவோர வியாபாரிகளுக்கு தேசிய நகர்ப்புற வாழ்வாதர இயக்கத்தால் நிதி உதவி
வழங்கப்பட்டதா? என்று 13.03.2023 அன்று நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் வைகோ
எழுப்பிய கேள்விக்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர்
கௌஷல் கிஷோர் அளித்த பதில் வருமாறு:அ) தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் மாநில மற்றும்
மாவட்ட வாரியாக அடையாள அட்டைகள் வழங்கப்பட்ட நகர்ப்புற விற்பனையாளர்களின்பட்டியல் யாவை?ஆ) நாட்டிலுள்ள விற்பனை மண்டலங்களின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மாநில மற்றும்மாவட்ட வாரியாக முன்மொழியப்பட்ட திட்டங்கள் பற்றிய விவரங்கள் என்ன?இ) அனுமதிக்கப்பட்ட திட்டங்களின் நிலை, திட்டங்களின் வகை, ஏற்படும் செலவு, காலக்கெடு
மற்றும் தாமதத்திற்கான காரணங்கள் என்ன?ஈ) தெருவோர வியாபாரிகளுக்கு நிதி மற்றும் நிதி குறித்த பயிற்சிகள் நடத்தப்பட்ட பகுதிகளின்
விவரங்கள் என்ன?உ) தமிழ்நாடு உட்பட மாநில/மாவட்ட வாரியாக தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ்
வழங்கப்பட்ட நிதி உதவியின் அளவு என்ன? கடன்பெற தகுதியான தெருவோர வியாபாரிகளின்
எண்ணிக்கை எவ்வளவு?வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் கௌஷல் கிஷோர் பதில்:(அ) முதல் (இ) வரை: தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மாநிலம்/யூனியன் பிரதேசம்வாரியாக கடந்த மூன்று ஆண்டுகளில், 1.அந்தமான் நிகோபார் -670; 2.ஆந்திரப் பிரதேசம் -2,25,170; 3.அருணாசல பிரதேசம் -100; 4. அசாம் -3,906; 5. பீகார் – 1,00,680; 6. சண்டிகர் –
2,345; 7. சட்டீஸ்கர் -4,680; 8. கோவா -187; 9. குஜராத் -5,627; 10. அரியானா -15,040; 11.ஹிமாச்சல பிரதேசம் -2,182; 12. ஜம்மு-காஷ்மீர் -499; 13. ஜார்கண்ட் – 9,512; 14. கர்நாடகா -49,467; 15. கேரளா – 6,587; 16. லடாக் -427; 17. மத்தியப்பிரதேசம் – 5,08,313; 18. மகாராஷ்டிரா-5,460; 19. மணிப்பூர் – 7,314; 20. மேகலாயா -258; 21. மிசோரம் – 1,775; 22. நகாலாந்து – 4,126;23. டில்லி – 56,422; 24. ஒடிசா – 29,127; 25. புதுச்சேரி – 2,303; 26. பஞ்சாப் -25,499; 27.
ராஜஸ்தான் – 30,133; 28. தமிழ்நாடு – 1,095; 29. தெலுங்கானா – 5,46,110; 30. திரிபுரா -8,327;31. உத்திரப்பிரதேசம் – 4,96,922; 32. உத்ரகண்ட் – 16,580; 33 என மொத்தம் 21,66,843தெருவோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.மாவட்ட வாரியான தகவல்கள் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால்பராமரிக்கப்படவில்லை.மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் அறிவித்தபடி, 28.2.2023 அன்று மொத்தம் 13,403 விற்பனைமண்டலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை,1. ஆந்திரப்பிரதேசம் -1,436; 2. அருணாசல பிரதேசம் – 20; 3. அசாம் – 125; 4. பீகார் – 172; 5.
சண்டிகர் – 53; 6. சத்தீஸ்கர் – 65; 7. கோவா – 26; 8. அரியானா – 114; 9. ஹிமாச்சல பிரதேசம் –
243; 10. ஜம்மு – காஷ்மீர் -17; 11. ஜார்கண்ட் – 79; 12. கர்நாடகா – 199; 13. கேரளா – 163; 14.
மத்தியப்பிரதேசம் – 2,080; 15. மகாராஷ்டிரா – 1509; 16. மணிப்பூர் -13; 17. மிசோரம் -435; 18.
நாகலாந்து -24; 19. ஒடிசா -145; 20. புதுச்சேரி -24; 21. பஞ்சாப் -441; 22. ராஜஸ்தான் – 1,055;
23; தமிழ்நாடு -2070; 24. தெலுங்கானா -346; 25. திரிபுரா -202; 26. உத்திரபிரதேசம் -2,191; 27.
உத்ரகண்ட் 148 என மொத்தம் 13,403 ஆகும்.மாநிலம்/யூனியன் பிரதேசத்தால் அனுமதிக்கப்பட்ட திட்டங்களின் விவரங்கள் வீட்டுவசதி மற்றும்
நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் அளவில் பராமரிக்கப்படுவதில்லை.(ஈ): தெருவோர நகர்ப்புற விற்பனையாளர் வழிகாட்டுதல்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புஆதார அமைப்பு மற்றும் கள ஊழியர்களின் ஆதரவுடன் அடையாளம் காணப்பட்ட தெருவோர
வியாபாரிகளுக்கு நிதி மற்றும் நிதி குறித்த பயிற்சிகளைகளை ஏற்பாடு செய்யும். அத்தகையபயிற்சிகளின் விவரங்கள் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின்அளவில்வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால், தெருவோர வியாபாரிகளுக்கு
பிணையில்லாத செயல்பாட்டு மூலதனக் கடனை எளிதாக்க 1.6.2020 முதல் பிரதம மந்திரி
தெருவோர வியாபாரிகளின் ஆத்மா நிர்பர் நிதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தெருவோர
வியாபாரிகள் டிஜிட்டல் ஆன்போர்டிங் இத்திட்டத்தின் ஒருங்கிணைந்த அங்கமாகும். அதுபோல,
உள்நாட்டில் உள்ள பயனாளிகளுக்கு, சம்பந்தப்பட்ட கடன் வழங்கும் நிறுவனங்களால் கடன்
வழங்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் பணப் பரிவர்த்தனைகள் நடத்திய ஒரு வாரத்திற்குள் வரவு
மற்றும் செலவு பரிவர்த்தனைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. 28.2.2023 நிலவரப்படி, 27.25
லட்சத்துக்கும் அதிகமான தெருவோர வியாபாரிகள் பட்டியல் டிஜிட்டல் முறையில்
பராமரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *