நாச்சியாள் சுகந்தி போட்டியிடுவார் என அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.

நாம் தமிழர் உறுப்பினர் கூட கிடையாது நான்- சீமான் அறிவித்த ‘தென்சென்னை வேட்பாளர்’ நாச்சியாள் சுகந்தி! ஆண்டு லோக்சபா தேர்தலில் தென்சென்னை தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக பத்திரிகையாளர் நாச்சியாள் சுகந்தி போட்டியிடுவார் என அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாம் நாம் தமிழர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது என திட்டவட்டமாக நாச்சியாள் சுகந்தி கூறியிருந்தார். சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சீமான், திமுக ஒரு கட்சி என பேசிக் கொண்டிருக்கக் கூடாது. 234 தொகுதிகளில் தொடர்ந்து போட்டியிடுகிறோம்; ஒருபோதும் என் கட்சி பிள்ளைகளிடம் எவ்வளவு செலவு செய்வாய்? எவ்வளவு கட்சிக்கு தருவாய்? என நான் கேட்டிருப்பேனா? புரட்சியின் மாறுதலை பிரபாகரன் மகன்கள்தான் செய்ய முடியும்.. வேறு எவனும் செய்ய முடியாது. “சாயும்” சீமான்.. “சிரிப்புதான் வருது, மாற்று அணி தேவை”.. அதென்ன 2 மேட்டர்? நிறம் மாறுதா நாம் தமிழர் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், மொழிச் சிறுபான்மையினர். மதச்சிறுபான்மையை வைத்து ஏன் கணக்கிடுகிறீர்கள்? 13,14 ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருக்கிறேன். கூட்டணி என பேசாதவன் எவன் இருக்கிறான்? இப்பவும் இல்லை.. எப்பவுமே கூட்டணி கிடையாது.. தனித்தே போட்டி. 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தனித்துதான் போட்டியிடுவோம். 20 பெண்களுக்கு வாய்ப்பு கொடுப்போம். 20 ஆண்களுக்கும் வாய்ப்பு கொடுப்போம். 2024 தேர்தலில் தலைநகர் சென்னையில் 3 பெண்களுக்கு வாய்ப்பு கொடுப்போம். ஒருத்தி மத்திய சென்னையில் என் பாத்திமா நிப்பா.. வட சென்னையில் என் தங்கச்சி இளவஞ்சி நிப்பா.. தென் சென்னையில் என் தங்கச்சி நாச்சியாள் சுகந்தி நிப்பா. தலைநகரில் 3 பெண்கள் போட்டி. இதுதான் நடக்கும் என கூறியிருந்தார்.  இதனிடையே சீமான் அறிவித்த தென்சென்னை வேட்பாளர் நாச்சியாள் சுகந்தி 10 நாட்களுக்கு முன்னதாக டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நாம் தமிழர் கட்சியின் அடிப்படை உறுப்பினராக கூட தாம் இல்லை என கூறியிருந்தார். மேலும் பாஜகவை கடுமையாக திமுக அல்லது அதிமுக எதிர்த்தால் அந்த இரு கட்சிகளையும் ஆதரிப்பேன் எனவும் நாச்சியாள் சுகந்தி கூறியிருந்தார். இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *