நடிகை யாஷிகா ஆனந்த்துக்கு கைது

செங்கல்பட்டு: விபத்து ஏற்படுத்திய வழக்கில் நடிகை யாஷிகா ஆனந்த்துக்கு கைது வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டெல்லியில் 1999ஆம் ஆண்டு பிறந்தவர் யாஷிகா ஆனந்த். அதன் பிறகு சில காரணங்களால் சென்னைக்கு குடிபெயர்ந்தது அவரது குடும்பம். யாஷிகாவும் சென்னையிலேயே தனது பள்ளி படிப்பை முடித்தார்.யாஷிகா ஆனந்த்; சந்தானம் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு உருவான இனிமே இப்படித்தான் என்ற படத்தில் முதல்முதலாக நடிக்க கமிட்டானார். ஆனால் சில காரணங்களால் அவர் தோன்றிய காட்சிகள் டெலிட் செய்யப்பட்டன. இதனால் யாஷிகா ஆனந்த் கவலையடைந்தார்.இதனையடுத்து கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் நீச்சல் டீச்சர் கதாபாத்திரத்தில் முதல்முதலாக திரையில் தோன்றினார் யாஷிகா. அதன் பிறகு கார்த்திக் நரேனின் முதல் படமான துருவங்கள் பதினாறு படத்திலும் ஸ்ருதி என்ற கதாபாத்திரத்தில் தோன்றினார். இதனயடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.யாஷிகா ஆனந்த்துக்கு இதுவரை பெரிய பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. மேலும் அவர் நடித்த படமும் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்படவும் இல்லை. ஆனால் அவர் நடித்த ஒரு படம் சர்ச்சையாகி பேசுபோருளானது. கடந்த 2018ஆம் ஆண்டு சந்தோஷ் இயக்கத்தில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படம்தான் அது.அடல்ட் காட்சிகள் நிறைந்த அந்தப் படத்தில் காவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் யாஷிகா. படம் வெற்றியடையாவிட்டாலும் அந்தப் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் யாஷிகா பக்கம் திரும்பியது.இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. ஆனால் அந்த நேரத்தில் சில வருடங்களுக்கு முன்பு ஈசிஆர் ரோட்டில் அதிவேகமாக காரில் சென்றதால் விபத்தில் சிக்கினார். அதில் அவரது தோழி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த யாஷிகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஓய்வில் இருந்தார் ஆக்டிவ்வாக இருந்துவருகிறார். மேலும் சில படங்களில் நடிக்கவும் கமிட்டாகியிருக்கிறார். இந்நிலையில் அதிவேகமாக சென்று விபத்தை ஏற்படுத்திய வழக்கில் யாஷிகா ஆனந்த் நேற்று முன் தினம் ஆஜராக வேண்டியிருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. எனவே வரும் 25ஆம் தேதிக்குள் ஆஜராக வேண்டும். இல்லையெனில் அவரை கைது செய்ய வேண்டும் என செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *