சென்னை: தமிழ்நாட்டில் நடிகர், நடிகைகள் அரசியலில் நுழைவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. தற்போது நடிகர் விஜய் தீவிர அரசியலில் இறங்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தான் அவர் பிறப்பித்துள்ள உத்தரவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் அவர் தனது பயணத்தை திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு நகர்த்த இருக்கிறாரா? என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது.தமிழ்நாட்டில் அரசியலும், திரைத்துறையும் பிரிக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் திரைத்துறை வழியாக அரசியலுக்குள் நுழைந்து எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் முதல்வரானார்கள். இவர்கள் அதிமுகவை சேர்ந்தவர்கள் என்றால் திமுகவின் மறைந்த முதல்வர் கருணாநிதிக்கும் திரைத்துறைக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது என்பதை நம்மால் மறுக்க முடியாது.அதன்பிறகு நடிகர்கள் சிவாஜி, பாக்கியராஜ் உள்பட ஏராளமான நடிகர்கள் அரசியலில் நுழைந்து ஜொலிக்கவில்லை. விஜயகாந்த் தேமுதிக கட்சியை தொடங்கி எம்எல்ஏ ஆன நிலையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி வரை முன்னேறினார்.அதேபோல் நடிகர் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கி எம்எல்ஏவானார். அதேபோல் நெப்போலியன் திமுகவில் இணைந்து மத்திய அமைச்சரானார். இதேபோல் நடிகர் ராதாரவி, நடிகர் எஸ்வி சேகர், நடிகர் வாகை சந்திரசேகர் உள்பட ஏராளமானவர்கள் எம்எல்ஏக்களாக இருந்துள்ளனர். நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பின்வாங்கினார். மாறாக நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார். கடந்த சட்டசபை தேர்தலில் அவர் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில் தற்போது அவர் காங்கிரஸ், திமுக கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.மேலும் தமிழ்நாட்டின் விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினும் கூட திரைத்துறையில் கால்பதித்து பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்நிலையில் தான் நடிகர் விஜய் அரசியலில் நுழையலாம் என்ற தகவல்கள் பரவி வருகின்றன. கடந்த ஆண்டு நகர்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு பல மாவட்டங்களில் வெற்றி பெற்றனர். இது விரைவில் நடிகர் விஜய் தீவிர அரசியலில் செயல்படலாம் என்பதற்கு வலு சேர்த்தது. இருப்பினும் அரசியல் தொடர்பாக நடிகர் விஜய் இதுவரை வெளிப்படையாக எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் கூட நடிகர் விஜய் மீதான அரசியல் பார்வை மட்டும் இன்னும் விலகவே இல்லை. இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.இந்நிலையில் தான் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆன்லைனில் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது நடிகர் விஜய் விரைவில் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கான முன்னோட்டம் என்ற தகவல் பரவ தொடங்கி
நடிகர் விஜய் தீவிர அரசியலில் இறங்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
