திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியின் அம்மா பாத்திமா இஸ்மாயில் (93). கொச்சியில் மம்மூட்டியின் குடும்பத்தினருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலையில் பாத்திமா இஸ்மாயில் மரணம் அடைந்தார். அவரது உடல் அடக் கம் நேற்று மாலை கோட்டயம் மாவட்டம் வைக்கம் அருகிலுள்ள செம்பு முஸ்லீம் பள்ளிவாசல் கபரஸ்தானில் நடந்தது. மம்மூட்டியின் அம்மா மரணத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்பட திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
நடிகர் மம்மூட்டியின் அம்மா மரணம்
