மாநில நகர்ப்புர உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ், ஆற்றல்திறன்கொண்ட புதிய தெருவிளக்குகளை அமைக்கும் பணிக்காக 6 மாநகராட்சிகளுக்குரூ.64.81/- கோடி நிதி ஒதுக்கப்பட்டு, இத்திட்டத்தின் கீழ், ஆவடி மாநகராட்சிக்கு ரூ.7.91/-கோடி திட்ட மதிப்பீட்டில் 4,445 புதிய விளக்குகளும், கடலூர் மாநகராட்சிக்கு ரூ.1.88/-கோடி திட்ட மதிப்பீட்டில் 1,287 புதிய விளக்குகளும், தாம்பரம் மாநகராட்சிக்கு ரூ.6.48/-கோடி திட்ட மதிப்பீட்டில் 3,634 புதிய விளக்குகளும், கோயம்புத்தூர் மாநகராட்சிக்குரூ.19.34/- கோடி திட்ட மதிப்பீட்டில் 7,701 புதிய விளக்குகளும், மதுரை மாநகராட்சிக்குரூ.15.23/- கோடி திட்ட மதிப்பீட்டில் 10,329 புதிய விளக்குகளும் மற்றும்திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு ரூ.13.97/- கோடி திட்ட மதிப்பீட்டில் 6,264 புதியவிளக்குகளும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.மேலும், 10 நகராட்சிகளில் வழக்கமான தெருவிளக்குகளை ஆற்றல்திறன் கொண்டவிளக்குகளாக மாற்றியமைக்கும் பணிக்காக ரூ.20.41/- கோடி நிதி ஒதுக்கப்பட்டு,இத்திட்டத்தின் கீழ், திருநின்றவூர் நகராட்சிக்கு ரூ.2.95/- கோடி திட்ட மதிப்பீட்டில் 3,297ஆற்றல் திறன் கொண்ட விளக்குகளும், வடலூர் நகராட்சிக்கு ரூ.3.05/- கோடி திட்டமதிப்பீட்டில் 2,809 விளக்குகளும், இடங்கணசாலை நகராட்சிக்கு ரூ.2.62/- கோடி திட்டமதிப்பீட்டில் 839 விளக்குகளும், தாரமங்கலம் நகராட்சிக்கு ரூ.1.79/- கோடி திட்டமதிப்பீட்டில் 1,477 விளக்குகளும், இலால்குடி நகராட்சிக்கு ரூ.1.27/- கோடி திட்டமதிப்பீட்டில் 1,871 விளக்குகளும், முசிறி நகராட்சிக்கு ரூ.0.84/- கோடி திட்டமதிப்பீட்டில் 821 விளக்குகளும், கருமத்தம்பட்டி நகராட்சிக்கு ரூ.3.01/- கோடி திட்டமதிப்பீட்டில் 1,914 விளக்குகளும், காரமடை நகராட்சிக்கு ரூ.1.06/- கோடி திட்டமதிப்பீட்டில் 2,097 விளக்குகளும், கோயம்புத்தூர் மாவட்டம், கூடலூர் நகராட்சிக்குர.1.35/- கோடி திட்ட மதிப்பீட்டில் 935 விளக்குகளும், களக்காடு நகராட்சிக்கு ரூ.2.47/-கோடி திட்ட மதிப்பீட்டில் 1,644 விளக்குகளும், ஆற்றல் திறன் கொண்ட விளக்குகளாகமாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் 33,660 புதிய ஆற்றல் திறன்கொண்ட விளக்குகள்அமைக்கப்படவும் மற்றும் 17,704 வழக்கமான தெரு விளக்குகள், . இந்த ஆற்றல்திறன்கொண்ட விளக்குகளின்மின் நுகர்வு, வழக்கமான விளக்குகளுடன் ஒப்பிடும்போது40 விழுக்காடு வரை குறைவாக இருக்கும். 17,704 வழக்கமான தெருவிளக்குகளைஆற்றல் திறன் கொண்ட விளக்குகளாக மாற்றுவதன் மூலம் நகர்ப்புர உள்ளாட்சி
அமைப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.4.29 கோடி நிதி சேமிப்பு இருக்கும் எனவும்மதிப்பிடப்பட்டுள்ளதுஎனவே, மாநில நகர்ப்புர உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ்,6 மாநகராட்சிகளுக்கு ரூ.64.81/- கோடி திட்ட மதிப்பீட்டில் 33,660 ஆற்றல்திறன்கொண்ட புதிய விளக்குகள் அமைக்கும் பணிகளுக்கும் மற்றும் 10 நகராட்சிகளுக்குரூ.20.41/- கோடி திட்ட மதிப்பீட்டில் 17,704 ஆற்றல்திறன் கொண்ட விளக்குகளாக மாற்றிஅமைக்கும் பணிகளுக்கும், மொத்தம் ரூ.85.22/- கோடி நிதியினை வழங்கி மாண்புமிகுதமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் உத்தரவிடப்பட்டு அரசாணை
வெளியிடப்பட்டுள்ளது.அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்
