கட்டுமானம் அமைப்புச் சார தொழிலாளர்களின் நியாமன கோரிக்கைகளை முதலமைச்சர் 110-விதியின் கீழ் அறிவிக்கவேண்டும்கட்டிட தொழிலாளர்கள் சங்க தலைவர் மு.பன்னீர்செல்வம் வேண்டுகோள்
அகில இந்திய கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்க பொதுச்செயலாளர் மு.பன்னீர்செல்வம் தெரிவித்திருப்பதாவது:-தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பில் மானியக்கோரிக்கையை கடந்த 29. ம் தேதிஅமைச்சர் சி.வி.கணேசன் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டார். அதில்கட்டுமானம் மற்றும் அமைப்புச்சார தொழிலாளர்களுக்கு பயன்தரும் சில அறிவிப்புகளை அறிவித்தார். அதை நாங்கள் வரவேற்றோம்அதேநேரத்தில் நாங்கள் பெரிதும் எதிர்பார்த்த பென்சன் ஆயிரம் என்பதை மூவாயிரம் ரூபாயாக உயர்த்துவது, இயற்கைமரணத்திற்கு 50 ஆயிரம்ரூபாய் என்பதை இரண்டு லட்சமாகவும், திருமண உதவிதொகை ஆண், பெண் இருபாலர்களுக்கும்இருபத்து ஐந்தாயிரம் ரூபாயாகவும் உயர்த்தி அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்தோம், அறிவிப்பு வரவில்லைதமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க.தேர்தல் அறிக்கையில் சொன்ன பெண்களுக்கான உரிமை தொகை ஆயிரம் வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவித்து பெண்களின் இதயத்தில் இடம்பிடித்துள்ளார்.எங்களின் நியாமான கோரிக்கைகளை சட்டமன்றத்தில் நூற்றி பத்து விதியின் கீழ் அறிவிப்பார் என எதிர்பார்க்கிறேம்.இதற்கான கூடுதல் செலவினம் அரசுக்கு ஏற்படாது. காரணம்கட்டிடம் கட்டவர்கள் மூலமாகபெறப்படும் “லெவி “ஒரு சதவீதம் நிதி பெறுவதின் மூலம் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில நிதியுள்ளது. அந்த நிதிதான் இதற்கு செலவிடப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்
தொழிலாளர்கள் சங்க தலைவர் மு.பன்னீர்செல்வம் வேண்டுகோள்
