துரோகி எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ் தரப்பினர் முழக்கமிட்டனர்.

திண்டுக்கல் : துரோகி எடப்பாடி பழனிசாமி அதிமுகவை விட்டு வெளியேற வேண்டும் என திண்டுக்கல்லில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஓபிஎஸ் தரப்பினர் முழக்கமிட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இருந்து விலகக்கோரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திண்டுக்கல்லில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். by அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வரவுள்ள நிலையில், ஓபிஎஸ் அணியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் எம்.பி. பெரும் புயலாக கிளம்பியது டிஎன்பிஎஸ்சி முறைகேடு.. இது என்ன அநியாயம்.. சட்டசபையில் மடக்கிய எடப்பாடி! நாளை தீர்ப்பு அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமாக அமைந்தது. இருப்பினும் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதற்கிடையே, அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு சமீபத்தில் தேர்தலை அறிவித்து வேட்பு மனுவையும் தாக்கல் செய்தார் எடப்பாடி பழனிசாமி. பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எதிராகவும் ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் நடைபெற்றன. இந்நிலையில், பொதுக்குழு தீர்மான வழக்கில் நாளை சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது. மூவர் கூட்டணி இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரைச் சந்திக்க இருப்பதாக அரசியல் அரங்கில் பரபரப்பு நிலவுகிறது. வாய்ப்பு அமைந்தால் டிடிவி தினகரனையும், சசிகலாவையும் சந்தித்துப் பேசுவேன் என ஓபிஎஸ் கூறி வருகிறார். இந்தச் சந்திப்புக்கான ஏற்பாடுகள் திரைமறைவில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே அனைவரையும் ஒருங்கிணைத்து கழகத்தை மாபெரும் வெற்றி அடைய செய்வேன் என்று சசிகலாவும் கூறியுள்ளார். ஓபிஎஸ் அணி ஆர்ப்பாட்டம் ஒருபக்கம் நீதிமன்றம் மூலம் சட்டப் போராட்டம் நடத்தும் ஓபிஎஸ் தரப்பு, இன்னொரு பக்கம் சசிகலா- தினகரன் மூலம் காய் நகர்த்தும் நிலையில், மக்கள் மன்றத்திலும் தங்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்துகளை முன்வைத்து, ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது. சிவகங்கையில் அண்மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் இன்று திண்டுக்கல்லில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே திண்டுக்கல் கிழக்கு, மேற்கு, தெற்கு மாவட்ட அதிமுக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். துரோகி பழனிசாமி – கோஷம் துரோகி எடப்பாடி பழனிசாமியை நிரந்தரமாக கட்சியை விட்டு விலக்கவேண்டும், அபகரிப்புக் கரையானே அதிமுகவை விட்டு வெளியேறு, பதவி வெறி பிடித்த எடப்பாடியே வெளியேறு என்று கண்டன கோஷங்கள் எழுப்பினர். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின்பு நடைபெற்று முடிந்த அனைத்து தேர்தல்களிலும் தொடர் தோல்வியைச் சந்தித்து வருவதால் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட அதிமுகவை தனது சுயநலத்திற்காக எடப்பாடி பழனிசாமி அழிக்க நினைக்கிறார் என்றும் குற்றம்சாட்டினர். ஓபிஎஸ்ஸை கட்சியை விட்டு நீக்கி ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டு முதல்வராகச் செயல்பட்டு வந்த ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கும் நோக்கத்தோடும், பதவிகளை பறித்து அவரை கட்சியிலிருந்து விலக்கும் எண்ணத்தோடும் கட்சி விரோத நடவடிக்கையுடன் செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமி அதிமுகவிலிருந்து விலக வேண்டும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றினர்.  ஏஜெண்ட் பழனிசாமி 2013 முதல் சசிகலாவுக்கு வரவு செலவு ஏஜெண்டாக இருந்தவர் தான் எடப்பாடி பழனிசாமி. அவர் சிறைக்குச் செல்லும்போது எடப்பாடி பழனிசாமியை முதல்வர் நாற்காலியில் அமர வைத்த தவறால் தான் இன்று நாம் இந்த நிலைக்கு வந்துள்ளோம். தவறானவரை அரசியலுக்கு அடையாளம் காட்டியதன் விளைவை இன்று அதிமுகவின் ஒன்றரைக் கோடி தொண்டர்களும் வேதனையில் துடித்து வருகின்றனர் என ஓபிஎஸ் அணியினர் பேசினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *