தீபாவளி பண்டிகை நாளை (அக்டோபர் 24) கொண்டாடப்படும் நிலையில் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு 6 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். மக்களின் வசதிக்காக விடிய விடிய சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாட நேற்று முன்தினம் மாலையில் இருந்தே சென்னையில் இருந்து, சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்து செல்கிறார்கள். இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.