தமிழகத்தில் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், அமரர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் கண்டெடுக்கப்பட்டவர், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராகவும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராகவும், வாரிய தலைவராகவும், பல்வேறு பொறுப்புகளிலும் பலமுறை தேர்வு செய்யப்பட்டு தமிழ் மக்களின் உயர்வுக்காகவும், தமிழ் நாட்டின் நலனுக்காகவும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும், தன்னை அர்ப்பணித்துக் கொண்டு பாடுபட்டுவருபவர். ஆங்கிலத்திலும், தமிழிலும் அற்புதமாக பேசும் பேச்சாளர். சிறந்த எழுத்தாளர், நல்ல கவிஞர் தொடர்ந்து மக்கள் பணியாற்றி வரும் அருமை அண்ணன் திரு.குமரி அனந்தன் அவர்கள் நாளை 19.3.23 91-வது வயதில் அடியெடுத்து வைப்பதையொட்டி அவருக்கு எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நூறாண்டுக்கு மேல் நலமுடன் வாழ்ந்திடவும், தொடர்ந்து பொது தொண்டாற்றிடவும் மனமார வாழ்த்துகிறேன்.
திருநாவுக்கரசர் எம்.பி அவர்கள் விடுக்கும் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி
