தாம்பரம் மாநகராட்சிகாண புதிய இலச்சினை (டogo) மாண்புமிகு மேயர் திருமதி வசந்தகுமாரி கமலகண்ணன் அவர்கள் வெளியிட்டார்.

தாம்பரம் மாநகராட்சிகாண புதிய இலச்சினை (டogo) மாண்புமிகு மேயர் திருமத

வசந்தகுமாரி கமலகண்ணன் அவர்கள் வெளியிட்டார்.
தாம்பரம் மாநகராட்சி, தாம்பரம், பல்லவபுரம், செம்பாக்கம், பம்மல் மற்றும்
அனகாபுத்தூர் ஆகிய 5 நகராட்சிகள், பெருங்களத்தூர், பீர்க்கன்கரணை, மாடம்பாக்கம்,
சிட்லபாக்கம் மற்றும் திருநீர்மலை ஆகிய 5 பேரூராட்சிகளை ஒன்றினைத்து 03.11.2021
முதல் மாநகராட்சியாக செயல்பட்டு வருகிறது.
இம்மாநகராட்சி 87.64 சதுர கிலோமீட்டர் பரப்பளவு, 70 வார்டுகள் மற்றும் 2022
ஆம் ஆண்டு உத்தேச மக்கள் தொகை 10,11,320 கொண்டதாகும். மேலும் தாம்பரம்
மற்றும் பல்லாவரம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.
தாம்பரம் மாநகராட்சிக்கு இலச்சினை (Logo) உருவாக்கும் பொருட்டு இலச்சினை
நகராட்சி நிர்வாக இயக்குநர், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம்
மற்றும் குடிநீர் வழங்கல் துறை அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டு, மாண்புமிகு நகராட்சி
நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் அவர்களின் வழியாக மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஒப்புதல் பெறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இன்று (27.03.2023) தாம்பரம் மாநகராட்சி, மாமன்ற கூட்ட
அரங்கில், மாண்புமிகு மேயர் திருமதி வசந்தகுமாரி கமலகண்ணன் அவர்கள் தாம்பரம்
மாநகராட்சிகாண புதிய இலச்சினை (டogo) வெளியிட்டார்.இலச்சினை விளக்கம் (Logo)
1. தாம்பரம் மாநகராட்சியில் 76 ஏரிகள் மற்றும் குளங்கள் பொதுப்பணித்துறை,
வருவாய் துறை மற்றும் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது.
2. திருநீர்மலை, பச்சை மலை, குமரன் குன்றம், பல்லாவரம் மலை, தாம்பரம் மலை,
செங்கழுநீர் மலை மற்றும் கச்சேரி மலை இயற்கை சூழலுடன் மலைகள்
அமைந்துள்ளது.3. MEPZ சிறப்பு பொருளாதார மண்டலம் 262 ஏக்கர் பரப்பளவில் 124 தொழில்
மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் 34750
மக்களுக்கு நேரடி வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது மற்றும் பல இலட்சம்
மக்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பு வழங்குகிறது.
4. கிழக்குத்தாம்பரம் பகுதியில் இந்திய பாதுகாப்பு துறையின் விமானப்படைத்தளம்
அமைந்துள்ளது .
5. கல்வி நிறுவனங்கள் – அண்ணா பல்கலை கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள
சென்னை தொழில் நுட்ப கல்லூரி (MIT), சென்னை கிறித்துவ கல்லூரி ( MCC),
பாரத் பல்கலைகழகம், மருத்துவ கல்லூரிகள், தொழில் நுட்ப கல்லூரிகள் மற்றும்
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைந்து கல்வி வளம் நிறைந்த
மாநகராட்சியாக உள்ளது.
இந்நிகழ்ச்சியில் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.கோ.காமராஜ் அவர்கள்,
ஆணையாளர் திருமதி ஆர்.அழகுமீனா,இ.ஆ.ப., அவர்கள், மண்டல குழு தலைவர்கள்,
நிலைகுழு தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து
கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *