தரமான சிறைச்சாலைகள் தமிழ்நாடு முதலிடம்.

இந்திய நீதித்துறையானது இந்தியா முழுவதும் உள்ள சிறைத்துறைகளில் ஆய்வுசெய்து ஆய்வறிக்கையை வெளியிட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாடு பல ஆண்டுகளாக சிறைத்துறை நிர்வாகத்தைப் பேணுவதில் ஒரு நிலையான வளர்ச்சியையும் மேலான உட்கட்டமைப்பை ஏற்படுத்தித் தருவதிலும் நல்ல மாற்றத்தைப் பதிவுசெய்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு முதல் இடத்தைப் பிடித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்திய நீதித்துறை ஆய்வறிக்கை: அதாவது தமிழ்நாடு சிறைத்துறை நிர்வாகமானது நல்ல உள்கட்டமைப்பு கொண்டுள்ளது என்றும் பொதுவாகச் சிறைகளில் நிலவும் கூட்ட நெரிசல் குறைத்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ள ஆய்வறிக்கை, சிறைச்சாலைகளில் சீர்திருத்த முயற்சிகளைப் பாராட்டியுள்ளது.மேலும் பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட, இந்த இந்திய நீதித்துறையின் ஆய்வு 2022 ஆம் ஆண்டுக்கான கணக்கெடுப்பில் தமிழ்நாடு சிறைத்துறை முதல் இடத்தைப் பிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளதுஇந்த ஆய்வறிக்கைக்காக 10 புள்ளிகளை நீதித்துறை அளவுகோலாக எடுத்துக் கொண்டதில், தமிழ்நாடு அதில் 6.4 என்ற அளவில் மதிப்பெண்ணைப் பெற்று முதல் இடத்தை எட்டிப்பிடித்திருக்கிறது. தமிழகத்தைத் தொடர்ந்து பாஜக ஆளும் மாநிலமான கர்நாடகா 6.01 என்ற மதிப்பெண்ணையும் தெலுங்கானா 5.35 மதிப்பெண்ணையும் பதிவு செய்துள்ளன இந்த ஆய்வில் உத்தரகாண்ட மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களும் முறையே 2.05 மற்றும் 3.55 என மிக மோசமான மதிப்பெண்களைப் பெற்று கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன இதற்கு முன்னதாக 2019 ஆம் ஆண்டுக்கான கணக்கெடுப்பில் தமிழ்நாடு பத்தாவது இடத்தைப் பெற்றிருந்தது. அதன்பிறகு 2020 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 6வது இடத்தினைப் பெற்று முன்னேறி இருந்தது என்பது குறிப்பிடவேண்டிய விசயம். இந்தக்கால கட்டங்களில் அதிமுக ஆளும் கட்சியாக இருந்தது என்பதையும் மறந்துவிடமுடியாது. கடந்த 10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சியில், சிறைத்துறையில் எந்தவிதமான முன்னேற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு ஆண்டுக்கால ஆட்சியில் சிறை நிர்வாகம் பல மாற்றங்களை அடைந்துள்ளதை யாரும் மறுக்கமுடியாது அதற்குச் சரியான உதாரணம் கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்திலுள்ள சிறைகளுக்குக் கனரக சலவை இயந்திரங்களை வழங்கி, மாபெரும் மாற்றத்தை சிறைத்துறைக்குள்ளாகக் கொண்டுவந்தார்.இந்த நடவடிக்கையைப் பாராட்டி ஸ்டாலினுக்கு மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி ஒரு கடிதம்கூட எழுதி இருந்தார். அந்தக் கடிதத்தில், “இது முன்மாதிரி நடவடிக்கை. குறிப்பாகப் பெண் கைதிகளுக்கு உதவும் வகையில் சிறைச்சாலைகளில் கனரக சலவை இயந்திரங்கள் வழங்கியிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது” என்றும் குறிப்பிட்டிருந்தார் அதற்கான சான்றாகத்தான் தமிழ்நாடு சிறைத்துறை நிர்வாகம் இந்திய அளவில் இப்போது முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்திய நீதித்துறை ஆய்வறிக்கை கணக்கெடுப்பு என்பது பல்வேறு மாநிலங்களில் செயல்படும் முறையான நீதி அமைப்பின் திறனை வரிசைப்படுத்த அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களைப் பயன்படுத்தும் ஒரு விரிவான அளவு குறியீடு ஆகும்.இந்த ஆய்வறிக்கை சில மதிப்பீட்டுக்களை கணக்கில் எடுத்துக் கொள்கிறது. அதில் முக்கிய அம்சங்களில் ஒன்றாகச் சிறைச்சாலைகளில் நிலவும் கூட்ட நெரிசல் கணக்கிடப்படுகிறது. மார்ச் 2020 ஆம் ஆண்டு கொரோனா நோய்த் தொற்று பரவலின்போது, சிறைச்சாலைகளின் உள்ள நெரிசலைக் குறைக்க ஸ்டாலின் அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொண்டது அதில் குறிப்பாக பல்வேறு வகையான கைதிகளுக்கு இடைக்கால ஜாமீனில் செல்லவும் பரோலில் செல்லவும் பரிந்துரை வழங்க ஒரு சிறப்பு உயர் அதிகாரம் கொண்ட குழுக்களை அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவிட்டது. இதனால் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூன் இடையில், 20 மாநிலங்களில் உள்ள சிறைச்சாலைகளிலும் இரண்டு யூனியன் பிரதேச சிறைச்சாலைகளிலிருந்துவந்த சிறைவாசிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 93.3% ஆகக் குறைக்கப்பட்டது. இந்திய நீதித்துறை ஆய்வறிக்கையானது, யுனைடெட் நேஷன்ஸ் ஆபீஸ் ஆன் டிரக்ஸ் அண்ட் கிரைமின் நெறிமுறைகளை எடுத்துக்கொள்கிறது. அதன்படி சிறைகளில் 120% க்கு அதிகமான கூட்டத்தை ‘நெருக்கடி’ என்றும் 150% க்கு அதிகமானதை ‘அதிதீவிர நெருக்கடி’ என இரண்டுவிதமாக வகைப்படுத்துகிறது. அதாவது 2021 ஆம் ஆண்டின் இறுதியில், 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சிறைச்சாலைகளில் நெரிசல் விகிதங்கள் மோசமானதாகவும், அதில் ஆறு மாநிலங்களில் கட்டுப்பாட்டை மீறி இருந்தது என்றும் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளத 100%க்கும் குறைவான ஆக்கிரமிப்பாளர்கள் உள்ள 17 மாநிலங்களில் பட்டியலில் தமிழ்நாடும் இடம்பெற்றுள்ளது. மேலும் 2022 ஆம் ஆண்டு 100% அல்லது அதற்கு மேற்பட்ட சிறைகள் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சிறை அதிகாரிகளின் எண்ணிக்கையில் அதன் பங்கு 11% ஆகக் குறைந்தது.பணியாளர் காலியிடங்களைப் பொறுத்தவரை, தமிழ்நாடு 9.8% ஆக மிகக் குறைந்தே காணப்படுகிறது. ஆனால், ஜார்கண்ட் மாநிலம் 60% அளவைப் பெற்று மோசமான நிலையில் உள்ள பட்டியலில் முதலிடத்திலும் உள்ளது இதனுடனும் ஒப்பிடும்போது சிறைத்துறைக்காக ஒதுக்கப்பட்ட முழு பட்ஜெட்டை நிதியையும் பயன்படுத்தியிருக்கும் ஒரே பெரிய மாநிலம் தமிழ்நாடுதான். அந்தவகையிலும் தமிழ்நாடு சிறப்பான புள்ளிகளைப் பெற்றுள்ளது. ஒரு அதிகாரியின் கண்காணிப்பில் இவ்வளவு கைதிகள் இருக்கவேண்டும். ஒரு சீர்திருத்த ஊழியருக்கு இத்தனை எண்ணிக்கையிலான கைதிகள்தான் இருக்க வேண்டும் என்று ஒரு கணக்கு இருக்கிறது. அதன்படி பார்த்தால் தமிழ்நாடு முறையே 21 மற்றும் 198 என்ற எண்ணிக்கையுடன் இந்திய அளவில் நல்ல மதிப்பைப் பெற்றுள்ளது. தமிழ்நாடு மற்றும் சண்டிகர் தவிர, வேறு எந்த மாநிலமும்/யூனியன் பிரதேசமும் “200 கைதிகளுக்கு ஒரு சீர்திருத்த அதிகாரி” என்ற அளவுகோலைப் பெறவில்லை. 21,257 கைதிகளுக்கு ஒரு சீர்திருத்த அதிகாரியைக் கொண்டுள்ள ஜார்க்கண்டில் அதிக பணிச்சுமை நிலவுவதாக ஆய்வில் மூலம் தெரியவந்துள்ளது. நாட்டிலேயே கைதிகளுக்குத் தொழில் பயிற்சி, சுகாதாரம் மற்றும் வீடியோ கான்பரன்சிங் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கச் செய்ததில் தமிழ்நாடு சிறப்பான மாநிலமாக உள்ளது என்றும் இந்த ஆய்வறிக்கை படம்பிடித்துக் காட்டுகிறது. “இந்திய அளவிலான சிறைச்சாலைகள் குறித்து வெளியாகி உள்ள தரவரிசை பட்டியலின்படி, தமிழக சிறைத்துறை நம்பர்-1 இடத்தைப் பிடித்துள்ளதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். சிறைக் கைதிகளுக்கான சீர்திருத்தம், மறுவாழ்வு அளிப்பது மற்றும் அவர்களை சமூக மயமாக்குவதற்காகப் பல நடவடிக்கைகளை அரசு சார்பில் எடுத்து எடுத்து வருகிறோம். அதற்கு முதல்வர் ஸ்டாலின் பெரிய அளவில் திட்டங்களை வழங்கி வருகிறார். தமிழ்நாடு சிறைத்துறையில் நடந்த மாற்றங்கள்: குறிப்பாகச் சிறையில் உள்ள நூலகங்களைப் புதுப்பித்தல், ஆடியோ புத்தகங்களை அவர்களுக்கு அறிமுகம் செய்தல், இலவசக் கல்வியை உருவாக்கித் தருவது, குடும்ப உறுப்பினர்களுடன் உரையாடும் வசதியை மேம்படுத்தித் தருவது, முறையான சிகிச்சை வசதிகளை ஏற்படுத்தித் தருதல், விளையாட்டு மற்றும் இசையை அறிமுகப்படுத்துதல் என எங்களால் முடிந்தவரைப் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அதற்கான ஒரு அங்கீகாரம்தான் இந்த ஆய்வறிக்கையின் முடிவு” என்கிறார் சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி மேலும் அவர், சிறைச்சாலையைச் சீர்திருத்தப் பள்ளிகளாக மாற்றுவதே எங்கள் நோக்கமாகும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *