PSTM சான்றிதழ் என்றால் என்ன?
Person Studied In Tamil Medium என்பதன் சுருக்கமே PSTM ஆகும்.
தமிழ் வழிக் கல்வியில் பயின்றவர் என்பதை குறிக்கவே PSTM சான்றிதழ் வழங்கப்படுகிறது.
தற்போது பள்ளியில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு பட்டப் படிப்புகள் மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அல்லது சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்படுவதால் இந்த சான்றிதழ் அவசியமாகிறது.
✍️தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்புகளில் தமிழ்வழியில் பயின்றவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு உள்ளதாலும் PSTM சான்றிதழ் அவசியமாகிறது. இந்தச் சான்றிதழ்களை இ சேவை மய்யத்திலும் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது