தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அறக்கட்டளைச் சொற்பொழிவு
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத்துறை சார்பில் கவியோகி
நாச்சிக்குளத்தார் கல்வி அறக்கட்டளை மற்றும் தந்தை பெரியார் அறக்கட்டளைச்
சொற்பொழிவுகள், பல்கலைக்கழகத்தின் பனுவல் அரங்கத்தில் காலை 10.00
மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர்
சி.தியாகராஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
இலக்கியத்துறையின் பேராசிரியர் முனைவர் பெ.இளையாப்பிள்ளை அவர்கள்
வரவேற்புரை வழங்கினார். மொழிப்புல முதன்மையர் முனைவர் ச.கவிதா
அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். சென்னை, பச்சையப்பன் கல்லூரியின்
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் வா.மு.சே.ஆண்டவர் அவர்கள் சங்க
இலக்கியமும் ஜப்பானிய இலக்கியமும் ஒப்பீடு என்னும் தலைப்பில் சிறப்புரை
ஆற்றினார். நிகழ்ச்சியின் இறுதியில் இலக்கியத்துறையின் இணைப்பேராசிரியர்
அ.ரவிச்சந்திரன் அவர்கள் நன்றியுரை வழங்கினார். மேற்கண்ட நிகழ்ச்சியில்
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத்துறையில் பயிலும் முதுகலை இரண்டாம்
ஆண்டு மாணவர் ச.தென்பாண்டி அவர்கள் இணைப்புரை வழங்கினார். திருச்சி,
தூய வளனார் கல்லூரி பேராசிரியர் முனைவர். சூசை மற்றும் தமிழ்ப்
பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அறக்கட்டளைச் சொற்பொழிவு
