புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள அரசு பேருந்தில் பணியாற்றும் ஓட்டுனர்களுக்கு விருது வழங்கும் விழா நிகழ்ச்சியானது டெல்லி கான்ஸ்டியூஷன் கிளப்பில் நேற்று நடந்தது. ஹீரோஸ் ஆன் தி ரோடு என்ற பெயரில் இந்த விருது வழங்கப்பட்டது. இதில் அரசு பேருந்தில் பணியாற்றும் ஓட்டுனர்கள் பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை விபத்து ஏற்படாமல் தங்களது பணியை மேற்கொண்டதற்காக இந்த விருதானது வழங்கப்பட்டது.
இந்த பாராட்டுமிக்க விருதை ஒன்றிய மாநிலத்திற்கான போக்குவரத்து துறை அமைச்சர் விகாஸ் சிங் வழங்கினார். இதில் தமிழ்நாட்டைசேர்ந்த 14 அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.இதில் மாநிலம் முழுவதும் குறிப்பாக விழுப்புரம் கடலூர், சிதம்பரம், கும்பகோணம் திருச்சி, மதுரை, சேலம், வாழப்பாடி, சென்னை ஆதம்பாக்கம், கோவை மற்றும் திருநெல்வேலியை சேர்ந்த ஓட்டுனர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.