தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பதற்கு காலதாமதம் ஏற்படும்.

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பதற்கு காலதாமதம் ஏற்படும் என்ற தகவல் பரவிவரும்நிலையில், இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி தந்துள்ளார். இந்தியாவின் பல மாநிலங்களில் வெயில் கொளுத்தி கொண்டிருக்கிறது. இந்தியாவின் 90 சதவீத பகுதிகள் வெப்பம் பரவும் என்றும், குறிப்பாக தலைநகர் டெல்லி பெரும் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது
வடமாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சில இடங்களில் பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததுமேலும், வெப்ப அலை பரவலை முன்னிட்டு, அதனை எதிர்கொள்ள, பணி நேரங்களை மாற்றியமைத்து கொள்ளும்படி மாநில அரசுகளிடம், மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது.. அந்தவகையில், நாளுக்கு நாள் வெப்ப அலை அதிகரித்து வரும் சூழ்நிலையில், ஒடிசா அரசு முன்கூட்டியே கோடை விடுமுறையை அறிவித்து விட்டது. அதேபோல தமிழகத்திலும், நடப்பு ஆண்டு கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது… பகல் நேரங்களில் வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸை தாண்டி பதிவாகி வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலால் மக்களால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் உள்ளனர்.. வீட்டிற்குள்ளேயும் அனலால் தகித்து வருகின்றனர்.. இயல்பான வெப்பநிலையிலிருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பதால் அதிக வெப்பநிலை காரணமாக உடல் நலப் பாதிப்புகளும் ஏற்படுகின்றன.. இதனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு நடப்பு ஆண்டு தேர்வுகளை விரைந்து முடித்து கோடை விடுமுறை அளிக்க கல்வித்துறை திட்டமிட்டது.அதன்படி, காலேஜ்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில் 2023-24 கல்வியாண்டுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும்நிலையில், விரைவில் தேர்வுகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் கல்லூரி கல்வி இயக்குநர் கீதா சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகளை ஜூன் 19ஆம் தேதி திறக்க வேண்டும் என்றும் அந்தந்த கல்லூரிகள் மொத்த வேலைநாளை, ஈடு செய்து கல்லூரிகள் செயல்படும் இறுதி நாளை முடிவு செய்து கொள்ளவும் அனுமதி அளித்துள்ளார். கோடை விடுமுறையை எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதேபோல, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்த நிலையில், கோடை விடுமுறை தமிழகத்திலும் துவங்கி விட்டது.. மாணவர்கள் இந்த விடுமுறையை உற்சாகமாக அனுபவிக்க துவங்கியுள்ளனர். 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கெனவே பொதுத்தேர்வுகள் முடிவடைந்து, தேர்வு முடிவுக்காக மாணவர்கள் காத்திருக்கின்றனர். இந்த வருடம் நீட் தேர்வுக்கு அதிகளவிலான மாணவ,மாணவிகள் விண்ணப்பித்து காத்திருக்கிறார்கள்.. அன்பில் மகேஷ்: இந்த நிலையில், கோடை வெப்பத்தின் காரணமாக பள்ளிகள் திறப்பு தாமதமாகுமா? என்பது குறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் பதிலளித்துள்ளார்.. “நான் முதல்வன்” திட்டத்தின் ஓர் அங்கமான இத்திட்டத்தின் தொடக்க விழா சென்னை, சைதாப்பேட்டை, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இத்திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.. அப்போது, பேசிய அவர், “எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *