
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் காவிரி ஆற்றின் கரையோரப்பகுதிகளில் கரை புரண்டு ஓடும் தண்ணீர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். 36 வீரர்கள் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை தீவுத்திடலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளை அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்தார். 47-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் அமைக்கப்பட்ட நிலையில் இன்று முதல் 25ம் தேதி வரை விற்பனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை: அபுதாபியிலிருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.1.05 கோடி மதிப்புடைய 2.42 கிலோ தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்க உருண்டைகளுக்கு வெள்ளி முலாம் பூசி, காா் வாஷ் மிஷினுக்குள் மறைத்து வைத்துக் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை: கபடி போட்டியில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் அருண் என்பவரை கொலை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 2018-ல் அருணை கொன்ற பார்த்திபன், மணிமாறன் மீது ஆதனக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். வழக்கில் பார்த்திபன், மணிமாறன் ஆகியோருக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் ஆயுள் மற்றும் தலா ரூ. 4000 அபராதம் விதித்துள்ளது.
வேலூர்: வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தனது தந்தை பெயரில் உள்ள நிலத்தின் மதிப்பை குறைவாக காண்பித்து பட்டா வழங்கியிருப்பதாகக் கூறி விஜயலட்சுமி என்பவர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரும் தரையில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: தனியார் பள்ளி யோகா ஆசிரியர் ஜேம்ஸ் மரிய ஞானராஜ்-க்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் பள்ளி மாணவனுக்கு திராவகம் கலந்த குளிர்பானம் கொடுத்த விவகாரத்தில், 2 சிறுநீரகங்களும் செயலிழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 11 வயது சிறுவன் உயிரிழந்தான்.
சென்னை: பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உள்பட 5 பேருக்கு ஜாமீன் நிபந்தனைகள் தளர்வு செய்யப்பட்டது. வாரந்தோறும் சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: ஜாமின் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி தாளாளர் உள்பட 5 பேர் மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தினமும் காலை மற்றும் மாலையில் விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் முன்பு கையெழுத்திட வேண்டுமென்ற நிபந்தனையில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது
தென்காசி: தென்காசி மாவட்டம் கடையம் அருகே 4 பேருக்கு எலிக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. எலிக்காய்ச்சல் உறுதியானதை தொடர்ந்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்
சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உள்பட 5 பேருக்கு ஜாமின் நிபந்தனைகள் தளர்வு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 10.30 மணிக்கு விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் முன்பு ஆஜராகி கையெழுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது
தேனி: பெரியகுளத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்ல பொதுப்பணித்துறை அறிவுறுத்தியுள்ளது
வேலூர்: குடியாத்தம் கவுன்டன்யா ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மோர்தானா அணைக்கு வரும் 844 கன அடி தண்ணீர் அப்படியே கவுன்டன்யா ஆற்றில் திறந்து விடப்படுகிற