தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் – குறை தீர்ப்பு மையம்
தொழிற்சாலைகளின் செயல்பாட்டினால் ஏற்படும் மாசு தொடர்பான குறைகளை தெரிவிக்கலாம்- மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், தகவல்
—
மாண்புமிகு சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளையானது நீதிப் பேரணை எண் : 2679/2023ல் மாநில மாசு கட்டுப்பாடு வாரியமானது, பொதுமக்களின் குறைகளைத் தெரிவிக்க குறை தீர்ப்பு மையம் ஒன்றை அமைக்க வேண்டுமெனவும், அதிலுள்ள அதிகாரிகளின் தொடர்பு விவரங்களை பொது மக்கள் அறியும் வண்ணம் தெரியப்படுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியமானது, தொழிற்சாலைகளினால் ஏற்படும் மாசு தொடர்பான பொது மக்களின் குறைகளை இணையதளம் வழியாக தெரிவிக்க ஏற்கனவே (https://tnpcb.gov.in/
மேலும், விருதுநகர் மாவட்டத்தில் பொது மக்கள் தொழிற்சாலைகளின் செயல்பாட்டினால் ஏற்படும் மாசு தொடர்பான குறைகளை மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், எண். 23, மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர் – 626 002. Ph : 04562-252442, மின்னஞ்சல் : deevdr@tnpcb.gov.in என்ற முகவரிக்கு கடிதம் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.